பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

நாடகமும் ரசிகரும்

ரசிப்பதையும் ஒரு கலையாகவே நாம் வளர்க்க வேண்டும். அதிலும் மற்றக் கலைகளைவிடச் சிறப்பாக காடகக் கலையை ரசிப்பதற்கு கன்கு பழக வேண்டும். மேடையில் கின்று தன்வயத்தராகி கடித்துக் கொண்டு இருக்கும் கலைஞர்களுக்கு, எதிரே வீற்றிருக்கும் அவை யோரின் அமைதியும் ஆதரவும்தான் உற்சாகமளிக்கக் கூடியது.

கலைஞன் தானே ரசிக்கும் கலையல்ல நாடகம். மற்றவர்களால் ரசிக்கப்படும் கலையாதலால், காடகக் கலையின் வளர்ச்சிக்கு ரசிகப் பெருமக்களின் ஒத் துழைப்பு இன்றியாமையாதது. இசைக் கலைஞன் ஒருவன் இல்லத்தில தனித்திருந்து இசைத்து இன் புறவும், மெய்மறந்து இசைச் சுவையோடு ஒன்றி விட வும் இயலும். ஒவியக் கலைஞனும் இதற்கு விலக்கல்ல. தனது சுவைக்காகவே தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவேகூட ஓவியம் திட்டத் தொடங்கி விடு வான். உணர்வு இழந்து நிற்பான். ஆனல் கடிப்புக் கலை தனித் தன்மை வாய்ந்தது. கடிகன் தனித்திருந்து கடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம், அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டு உணர்ச்சிகள், மேடையில் கடிக்கும் கடிகனின்