பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


பாத்திரப் படைப்பே நாடகத்தின்.வெற்றி

பாத்திரப் படைப்புத்தான் நாடகத்தின் வெற்றி. காடகக் கதை ஒரு முழு உருவம். கண், காது, மூக்கு முதலிய உறுப்புக்கள் பாத்திரங்கள். அதாவது ஒரு கதைக்குத் தலைவன், தலைவி மற்றும் கதை நிகழ்ச்சியில் தொடர்புள்ளவர்கள், இவர்களே பாத்திரங்கள் அல்லது உறுப்பினர்கள்.உறுப்புக்களில் ஊனமிருந்தால் உருவம் அழகு பெறுமா? அதுபோல உறுப்பினர்களின் படைப்பு சரியில்லா விட்டால் நாடகம் அழகு பெருது.

அறிவுக் கண் படைத்த ஆசிரியன்

பலகோடி மனிதர்கள் உலகத்தில் ஆல்ை ஒரு

வரைப்போல் மற்றாெருவர் இருப்பதில்லை. பொதுவாகப் பார்த்தால் எல்லோரும் ஒரே தோற்றம். அப்பப்பா! எத்தனையோ மாறுபாடுகள் மனிதனுடைய புறத் தோற்றத்தில் மட்டுமா? அகத் தோற்றத்திலும் ஆயிரம் ஆயிரம் மாறுபாடுகள் உருவம் கமக்குத் தெரிகிறது. ஆல்ை உள்ளம் தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொள்ள அறிவுக் கண் வேண்டும். அந்தக் கண்ணைப் பெற்றவன்தான் நாடகாசிரியன் உங்கள் உள்ளத் தையும் என் உள்ளத்தையும் அவன் துருவிப் பார்த்து விடுகிருன். மனிதன அவன்?......இல்லை.

“ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோடு ஒப்புக் கொளல்’

வள்ளுவரே கூறிவிட்டார் அவன் தெய்வத்திற்கொப்

பானவன், என்று. அதற்குமேல் தீர்ப்பேது?

கல்லவனும் கெட்டவனும் கலந்து வாழும் உலகம்

இது. கல்லவன் யார்? கெட்டவன் யார்? என்பதை