பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வை சண்முகம் வாழ்க்கை நெறி

-கவிஞர் புத்தனேரி ரா. சுப்பிரமணியம்

‘அவ்வை தி. க. சண்முகம் அவர்களின் காடக வாழ்க்கை மிகச் செவ்வையானது.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நாடகக் கலைஞர்கள் டி. கே. எஸ். சகோதரர்கள் என்ற புகழுக்கு முக்கிய காரணமானவர் திரு. சண்முகம். இவர் பிறந்த நகர் திருவனந்தபுரம். பிறந்த நாள் 26-4-1912. தந்தை யார் பெயர் திரு. கண்ணுசாமி பிள்ளை. இவரும் நடிகரே. தாயார் பெயர் சீதையம்மாள்.

நாடக கால்வரில் திரு. சண்முகம் மூன்றாம் பிள்ளை சங்கரன், முத்துசாமி இருவரும் இவருக்கு மூத்தவர்கள். திரு பகவதி இளையவர்.

திரு. சண்முகம் தமது தெய்வமாகப் போற்றிய ஆசிரியர் தவத்திரு. சங்கரதாச சுவாமிகள். சதாவ தானம் தெ. பொ. கிருட்டினசாமிப் பாவலர், எம். கந்த சாமி முதலியார் ஆகியோரும் திரு சண்முகம் அவர் களின் நாடக ஆசிரியர்களாக-இயக்குநர்களாகவிளங்கினர்கள்.

தம் ஆருவது வயதில் கடிகராகச் சேர்ந்தார் சண்முகம், அது முதல் 55 ஆண்டுகள் நீண்ட நெடுங் காலம் நாடகக் கலை வாழ்வில் நல்ல பல புதுமைகளைச் செய்து தரம் வளர்த்த பெருமை இவருக்கு உரியது.