பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது ஆவல்

நாடகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிற்சி கொடுக்கும் வகையில் கல்லூரிப் பாடத் திட்டம் அமைய வேண்டும்.

கலைஞர்கள் தம் வளர்ச்சிக்குத் துரண்டு கோலாய்ப் பயிற்சி தந்த ஆசிரியர்களையும், வழி காட்டிய பெரியோர்களையும், என்றும் நன்றி உணர் வோடு போற்ற வேண்டும்.

கருத்து வேற்றுமைகளுக்கு மதிப்புக்கொடுத்து, மாசில்லாப் பாசத்துடன் கலந்து பழகி, ஒற்றுமை காக்கும் மனப் பண்பு கலைஞர்களிடையே வளர வேண்டும்.

அனைத்துலகிலும் தமிழ் நாடகத்திற்கு ஈடில்லை என்று தமிழன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை வருவதற் கான வழிவகைகளை அரசும் கலைஞர்களும் இணைந்து காண வேண்டும்.

இதுவே எனது ஆவல்.

தி. க. சண்முகம்

18 – 4 - 1972