பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


விளக்கிச் சுத்தப்படுத்தி வைக்காத பாத்திரம் எப்படி இருக்கும்? அனுபவமில்லாத நடிகனிடம் அகப்படும் ாாடகப் பாத்திரத்திற்கும் அதே கதிதான் அற்புதமாக உருவாக்கியிருப்பான் ஆசிரியன். நடிகன் அதை அலங் கோலப்படுத்தி, உருக்குலைத்து, காசப்படுத்தி விடுவான். பாத்திரம் வெள்ளியா, வெண்கலமா, மண்ணு, பொன்ன என்றுகூடக் கவனிப்பதில்லை.

கடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தோற்றம், பருவம் இவற்றைக் கவனிப்பது நல்லது. பத்து வயதுச் சிறுவர்கள் காதல் உரையாடுவது அவர்களுக்கும் கல்ல தல்ல; பார்ப்பவர்க்கும் கல்லதல்ல. நம்முடைய எதிர் காலச் சந்ததிகளான சிறுவர்களுக்குப் பருவத்திற்கு ஏற்காத விஷயங்களைப் பயிற்றுவித்துக் குழந்தை உள்ளங்களை மாசுபடுத்துவது மாபெருந்தவறு.

நடிப்பும் படிப்பும்

சிறுவர்களுக்காகத் தனி நாடகங்கள் கடத்து கிறார்கள் மேல்நாடுகளில். அதில் சிறுவர்களே நடிக் கிறார்கள். நம் காட்டிலும் இப்படி வரவேண்டும் கடிப்பு சோபிக்கப் படிப்பு வேண்டும். பொது அறிவு கிரம்பப் பெறவேண்டும்.

நாடகமென்பது முன்பெல்லாம் ஆட்டமும் பாட்டும் தான். சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா? நெஞ்சை யள்ளும் சிலப்பதிகார மென்றாேரே பாரதியார். அது ஒன்றுதான் கமக்குக் கிடைத்திருக்கும் காடகச்செல்வம். அரங்கேற்று காதைக்கு அடியார்க்குநல்லார் எழுதி வைத்திருக்கும் உரையில் சில கடிப்புக் குறிப்புகள் இருக்கின்றன. அவையெல்லாம் காட்டியத்திற்கு. இன்றைய நாடகத்திற்கு ஒத்துவராது. ஆனல் அந்தப்