பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


குரலிலே பாவம்

பக்கத்தில் கிற்கும் கடிகர் வசனத்தை மறந்துவிட்டு விழிப்பார் சில சமயங்களில். புத்திசாலி நடிகன் அதைச் சமாளிக்கவேண்டும். கற்றதைக் கக்கிவிடக் கூடாது. நடிகன் தன்னுடைய குழப்பத்தால் சபையைக் குழப்பித் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சபையின் கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் கேட்க வேண்டு மென்பதை மறந்துவிடக் கூடாது. சபையில் கடைசி வரிசையிலிருப்பவர்களுக்கு கடிகனுடைய முகபாவம் கன்றாகத் தெரியாது. ஆகையில்ைகுரலிலும் பாவத்தை வெளிப்படுத்தி ஓரளவுக்கு அங்க அசைவுகளிலும் உணர்ச்சிகளைக் காட்ட வேண்டும்.

இதை மிகை நடிப்பு (ஒவர் ஆக்ட்) என்று முன் வரிசை ரசிகர்கள் குறை கூறுவர்கள். அதற்கென்ன செய்வது? சபை முழுதும் ரசிக்க வேண்டாமா? பாத்தி ரத்தோடு ஒன்றுபட்டும் வேறுபட்டும் ஒரே சமயத்தில் “அஷ்டாவதானம் செய்ய வேண்டும் கடிகன்; அவன் தான் வெற்றி பெறுவான். கடிகன் சபையை எப்பொழு தும் பொதுவாகவே பார்க்கவேண்டும். குறிப்பாக யாரையும் பார்க்கக்கூடாது. முன் வரிசையில் இருக்கும் தன் கண்பரைப் பார்த்ததும் ஒரு முறுவல்; கண் சிமிட்டல், இவையெல்லாம் தவருண செய்கை.

நாடகத்தின் மொத்த மதிப்பு

கடைசியாக ஒன்று. அழகான உருவத்தில் ஒரு சிறு ஊனமிருந்தால்கூட அது பெருங்குறையாக, எடுத்துக் காட்டுமல்லவா? அதைப் போல, சிறந்த நடிகர்கள் கூட்டத்தில் ஒரு துணை நடிகர் சரியாய்