பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

நாடகத்தில்

தமிழ் நடை

‘ുകേt கேளுங்கள் சபையோர்களே! இப்படி யாகத்தானே அரிச்சந்திர மகாராஜனுகப்பட்டவன். நாடு ககர முதலானதுகளை விசுவாமித்திர முனியிடம் கொடுத்துவிட்டுக் காசிக்கு வரும் வழியில் அநேக துயரை யடைந்து, காசி நகரக் கோபுரத் தோற்றம் கண்டு தன் பத்தினிக்குத் தெரிவித்துக் கரங்கூப்பித் தொழுகிற விதங் காண்பீர்கள் கனவான்களே!”

இது பழங்கால காடக வசனம். இப்படிச் சொல் வதற்குப் பொது வசனம் என்று பெயர். நாடக விளக்கத் துக்காகக் கட்டியக்காரன் இதைப் பேசுவான். இப்படிப் பேசப்படும் நீண்ட பொது வசனங்களைத் தவிரப் பெரும் பாலும் எல்லாம் பாடல்கள்தாம். பாடலும் ஆடலும் தான் நாடகம். பண்டைக் காலந் தொட்டு நாடகத் தமிழ் இசைத் தமிழோடு சேர்ந்தே வளர்ந்து வந்திருக் கிறது.

அபூர்வமாகச் சில சமயங்களில் பாடலின் கருத்தை யொட்டி வசனமாகவும் சில வரிகள் பேசுவது உண்டு. கேளாய் பெண்ணே சந்திரமதி லோகத்தில் உள்ள வர்கள் செய்யும்படியான சகல பாவங்களையும்