பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


தொடங்கினர்கள் இனறும்கூட பழைய ஸ்பெஷல் நாடகங்களில் இந்த முறையைப் பார்க்கிருேமல்லவா? அந்த காளில் பேசத் தெரியாத அப்பாவி கடிகர் எவராவது அகப்படடுக்கொண்டால், பேசத் தெரிந்த கடிகர் அவரைத் தாறுமாருண் கேள்விகள் கேட்டு த் திக்குமுக்காட வைத்து அவையோரின் கைதட்டலைப் பெறுவார். பேசத்தெரிந்த இரண்டு கடிகர்களுக்குள் சில சமயங்களில் இப்படிப் போட்டி வந்துவிடும். நீண்ட நேரம் வாதம் நடைபெறும். கடிகர்கள் கதையை விட்டு, வெகுது.ாரம் விலகிப்போய் உலாவுவார்கள். சொந்த விவகாரங்களெல்லாம் அம்பலத்துக்கு வரும்

பூத் தொடுப்பது போல் பேசுகிறீரே” என்று ஸ்திரீ பார்ட் நடிகர் பேசி, ராஜபார்ட் நடிகர் பூத்தொடுக்கும் ஜாதியினர் என்பதைக் குத்திக் காட்டுவார். சபையில் கரகோஷம கிளம்பும். ராஜபார்ட் நடிகரும் சளைக்காமல் * உன் பேச்சு சன்னம் வைத்து இழைப்பதுபோல் இருக் கிறதே’ என்று கூறி ஸ்திரீ பார்ட் கடிகர் ஆசசாரி வகுப்பினர் என்பதை நினைவு படுத்துவார். உடனே இருவருக்கும் கைதட்டல்... கடைசியாகச் சபையோர் சிலர், நாடகக் கதையை ஞபாகப் படுத்த வேண்டிய நிலைமையேற்படுவதுண்டு. இப்படியெல்லாம் நடிகர்கள் கற்பனையாகப்பேசி கட்டுப்பாடில்லாது நின்றகாலையில நாடகத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு ஒழுங் காக வசனங்கள் எழுதிக் கொடுத்து நாடகப் பேச்சு முறையை வகுத்த பெரியார் தவத்திரு சங்கரதாச சுவாமிகளாவார்.

சுவாமிகளின் உரைகடை இனிமையானது. பொருள் நிறைந்தது அவை பெரும்பாலும் நீண்ட வசனங்கள்.