பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


பணம்கொடுத்து அனுமதிச் சீட்டுப்பெற்று வக்தவர்கள் மிகமிகக் குறைவு. காட்சிகள் குறைவாயிருக்க வேண்டும்

ஆடிப் பாடிக் குதித்து அங்கங்களைக் கோணல் செய்து சொல்லுக்குச் சொல் கையைத் துக்கி காட்டிய அபிநயம் போல் நடித்த காலம் போய், இப்போது ஒரளவுக்கு இயற்கையாக கடிப்பதைப் பார்க்க ஏராள மான ரசிகர்கள் வருகிறார்களே என்று நாம் மகிழ்ச்சி யடைய வேண்டும்.

ஒரே காட்சியில் காடகம் முடிந்துவிட வேண்டு மென்று, கான் வற்புறுத்தவில்லை. இயன்ற வரையில் காட்சிகள் நாடகத்தில் குறைவாக இருந்தால்தான் அவற்றை உருண்டு உயரும் திரைகளாக விடாமல் நல்ல முப்பரிமாண முறையில் அமைத்துக் காட்டலாம் இன்னும் இயற்கையாக கடிக்கலாம். இத்தகைய குறைந்த காட்சிகள் உள்ள நாடகங்களை நான் பெரிதும் வரவேற்கிறேன். ஆல்ை குறைந்த காட்சி களில் நாடகங்கள் எழுதும் ஆசிரியர்கள், தாம் எழுதும் காடகங்களைத் தமிழகத்தின் சூழலில், நம்முடைய பழக்க வழக்கங்களை மனத்தில் கொண்டு ஆங்கில நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றாத வண்ணம் எழுதவேண்டும் என்பது என் வேண்டு கோள்.

அத்தகைய நாடகங்கள் தோன்றிவிடுமானுல் கடிப் பிலே இன்னும் பல சீர்திருத்தங்களைச் செய்து, மகத் தான வெற்றிபெறக் கூடிய கடிகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதை நம்பிக்கையோடும் உறுதி யோடும் சொல்லிக் கொள்கிறேன்.

-சென்னை வாளுெமி.

12-10-1963