பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


தேனொழுகப் பேசுகிருன்” என்று சொல்வதைக் கேட்கி ருேமல்லவா? இது ஏமாற்றுவதற்காகப் பேசும் பேச்சு. ஆத்திரத்தோடு பேசுவதும அன்போடு. பேசுவதும் குரலிலேயே தெரிய வேண்டும். நமது உணர்ச்சிகளைக் குரல் சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதற்கும் பயிற்சி அவசியம். குரல் பயிற்சியில்லாதவர்கள் சிறந்த கடிப்புத் திறமை உடையவர்களாக இருந்தாலும் முழு வெற்றிபெற முடியாது

மேடையில் பேசும் ரகசியம்

மேடையில் ரகசியம் பேசுவது ஒரு தனிக்கலை. சில சமயங்களில் பேசுவது ரகசியமாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் சபையோருத்கும் கேட்க வேண்டும். மனேகரன் நாடகத்தில், மனேகரன் தன் தாயாருக்கு ஒரு வாக்குறுதி கொடுத்துவிடுகிருன்.

மனுேகரன் பல இடங்களில் கோபம்கொண்டு தந்தையை வெட்டப்போகும் போதெல்லாம் மந்திரி சத்தியசீலர் அந்த வாக்குறுதியை நினைவுபடுத்துகிறார், மனேகரனுக்கு மட்டும் கேட்கும்படியாக அவன் காதில்தான் சொல்வார். ஆனல் அது சபையோருக்கும் தெளிவாகக் கேட்க வேண்டும். உம் தாயாருக்குக் கொடுத்த வா க் ைக மறவாதீர்,” என்று ரகசியம் பேசுவது போல அந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் குரல் பயிற்சி அவசியம் வேண்டும்.

மகரக்கட்டும் சாதகமும்

அந்த நாளில் நாடகக் குழுக்களில் குரல், பயிற்சிக் காக அதிகாலையில் எழுந்து, பாடி, சாதகம் செய்