பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


வார்கள். பதின்ைகு வயதுக்கு மேல் ஆண்களுக்குக் குரல் மாறுவதுண்டு. மகரக்கட்டு’ என்று அந்தப் பரு வத்தைக் குறிப்பிடுவார்கள். அந்தப் பருவத்தில்தான் இளைஞர்கள் குரல் பயிற்சியைக் கட்டாயமாகச் செய்து குரலை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து குரல் சாதகம் செய்யும் வழக்கம் எல்லாம் இப் போது குறைந்து வருகிறது. அதனுல்தான் குரல் வளமும் குறைந்துகொண்டே வருகிறது.

சிம்மக் குரலும் குயிலின் குரலும்

இன்னென்று முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். ஆண் குரல் வேறு. பெண் குரல் வேறு. ஆண்குரல் கம்பீரமாக இருக்கும்; இருக்க வேண்டும். பெண் குரல் இனிமையாக இருக்கும்; இருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆணின் குர2லச் சிம்மக்குரல் என்பார்கள். பெண்ணின் குர2லக் குயில் குரல் என்பார்கள். எனவே பெண் வேடம் போடுபவர்கள் ஆணுயிருந்தால் தமது கம்பீரமான குரலை இனிமையுடையதாக்கிப் பேச வேண்டும்.

பருவத்திற்கேற்றபடி குரல் மாற்றம்

பருவத்துக்குத் தக்கபடி குரலும் மாறிக்கொண்டே போகிறது. கிழப்பருவம் வந்துவிட்டால் குரலிலும் அந்தத் தளர்ச்சி நடுக்கம் எல்லாம் ஏற்பட்டுவிடுகிறது. வயோதிகராக கடிப்பவர் பதினெட்டு வயது வாலிபராக இருக்கலாம். ஆல்ை பேசும்போது பதினெட்டு வயது வாலிபராகப் பேசில்ை கன் ருயிராது. குரலிலும் அந்த வயோதிகப் பருவத்தைக் காட்ட வேண்டும். குரல பயிற்சியிருந்தால் இதெல்லாம் சுலபமாக இருக்கும்.