பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


சபையில் ஒரே சிரிப்பொலி, எவ்வளவு ரசனைக் குைறவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டம் அல்ல அது. எதிரே சிம்மாதனத்தில் வீற்றி ருந்த புருஷோத்தமன் உதடுகளிலும் புன்னகை தவழ்ந் தது. ஒரு விடிை எனக்கு ஒன்றும் புரியவில்லை.

பிறகு உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய் விடும் போலிருந்தது. மனேகரனுடைய அப் போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது. விஷயம் என்ன தெரியுமா? காவலனிடமிருந்து கான் உடைவா8ள உருவியபோது என் கையோடு வந்தது கத்தியின் கைப் பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கிவிட்டது.

உணர்ச்சி வேகத்தில் கான் இதைக் கவனிக்க வில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனேகரனின் கிலையைக் கண்டு யார்தான் சிரிக்க மாட்டார்கள்: என்னுடைய கிலே மிக மிகப் பரிதாபகரமாக இருந்தது. நான் எப்படிச் சிரிக்க முடியும்? இப்படி மிகப் பரிதாப கரமாக எங்கள் பொறுமையைச் சோதிக்கும் கட்டங்கள் அநேகம் உண்டு.

இன்னெரு பரிதாபத்திற்குரிய சம்பவத்தைச் சொல் கிறேன். 1932ல் ஒருநாள். சந்திரகாந்தா நாடகம் கடந்து கொண்டு இருந்தது. சுண்டுர் இளவரசன் சந்திர வதைைவப் பலாத்காரம் செய்யப் போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.

பூங்காவில் சந்திரவதன உலாவிக் கொண்டு இருது கிருள். சுண்டுர் இளவரசன் அங்கு வருகிறன். தனக்கு