பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

என் தந்தையார் அவ்வை சண்முகம் அவர்களின் நாடகச் சிந்தனைகளே ரத்தினசி சுருக்கமாக இந்நூல் வழங்குகின்றது. நாடகத்தின் பல அங்கங்களையும் ஆராய்ந்து நடிப்புத் துறை யில் ஈடுபடும் எல்லோருக்கும், கையடக்கமாக இச் சிறிய நூல் அமைந்துள்ளது, வாசக அன்பர்களும், கலாரசிகர்களும் இம்முயற்சிக்குப் பேராதரவு தரவேண்டுமெனப் பணிவன் புடன் வேண்டிக் கொள்கிருேம்.

என் தந்தையார், ஏற்கனவே எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை (பாகம் ) என்னும் நூல் வாசக அன்பர்களின் பேராதரவைப் பெற்றது. அதே போன்று. அவருடைய பிற்கால வாழ்க்கையையும்.அவர் மறைவெய்திய காலம்வரை யில் சேர்த் து எழுதி, வாசக அன்பர்களின் வேண்டுகோளுக் கிணங்க, எனது நாடக வாழ்க்கை (பாகம் 2) என்ற தலைப்பில், ஒரு நூலையும் விரைவில் வெளிக் கொணர்வதற்கு வேண்டிய முயற்சிகள் எடுத்து வருகிருேம் என்பதையும் இச்சமயம் பெருமையோடு குறிப்பிடுகிருேம். அந்நூலையும் “கவிஞர்கோ’ புத்தனேரி ரா சுப்பிரமணியம் அவர்களே தொகுக்கின்றார். அம்முயற்சிக்கும் வாசக அன்பர்கள் பெரும் அளவில் ஆதரவு தர வேணுமாய்ப் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிருேம்.

வாழ்க நாடகக் கலை !

139.சி, அவ்வை இங்ஙனம், சண்முகம் சாலை, . ● சென்னை.88. டி. கே. எஸ். கலைவாணன்