பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


இக்காடகம் அரங்கேறியது. பின்னல், இந்நாடகத் திற்கே கதர் பக்தி எனப் பெயர்சூட்டி மேலும் சில புதிய காட்சிகளைச் சேர்த்தார் அவர்.

பாவலர் அவர்கள், தொடர்ந்து பல தேசிய நாடகங் களை எழுதியிருக்கிறார். தமது இரண்டாவது நாடக மாக, காகபுரியில் கடந்த கொடிப் போராட்டத்தை அடிப்படையாக வைத்துத் தேசியக் கொடி என்னும் ஒருநாடகத்தினையும் அவர் உருவாக்கினர். தேசியத்தின் மற்றாெரு அங்கமாக விளங்கியது மதுவிலக்கு குடிப் பதில்ை வரும் கேட்டினை நன்கு விளக்கும் பதிபக்தி’ என்னும் நாடகத்தையும் அவர் இயற்றினர். அதன் தொடர்பாக பம்பாய் மெயில் என்ற நாடகத்தினையும், குதிரைப் பந்தயத்தின் கேடுகளை விளக்கும். கவர்னர்ஸ் கப்’ என்னும் காடகத்தையும் எழுதினர். இக்காடகங் கள் அனைத்தும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி யாராலும், மற்றும் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான காடகக் குழுவினராலும் நூற்றுக்கணக்கில் நடிக்கப் பெற்றுள்ளன. பாவலரின் இக்காடகங்கள் நூல் வடிவி லும் வந்துள்ளன. விடுதலைப் போராட்டக் காலத்திலே, பாவலருடைய இக்காடகங்கள் மிகவும் பயன் தருவன வாக இருந்தன என்பதில் ஐயமில்லை.

கதரின் வெற்றி நாடகத்திலே கதராடை புனைந்த கதாநாயகன் சுந்தரத்திற்கும் பரதேச ஆடைகளைப் புனைந்த அவன் காதலி மரகதத்திற்கும் கடக்கும் உரை யாடல் மிகச் சுவையானது.

சுந்தரம் மரகதத்தை எதிர்பார்த்துக் கோபத்தோடு பூங்காவில் வீற்றிருக்கிருன். மரகதம் வருகிருள். தன் காதலன் கோபத்தோடு இருப்பதைப் பார்க்கிருள்.