பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


தமிழ் நாடக மேடையை வளர்த்த தலைமை ஆசான் தவத்திரு சங்கரதாச சுவாமிகள், மகா வித்து வான் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளையின் தத்துப் புத்திரர் என்பதை உணரும்போது இசை உலகிற்கும், காடக உலகிற்கும் இருந்துவந்த நீண்ட காலத் தொடர்பு நமக்கு நன்கு தெரிகிறது. தமிழிசை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே நாடக மேடை மூலம் தமிழ் இசையை வளர்த்த பெரியார்களில குறிப்பிடத் தக்க வர்கள் சீர்காழி அருளுசலக் கவிராயர், கோபால கிருஷ்ண பாரதியார், சங்கரதாச சுவாமிகள், ஏகை-சிவ சண்முகம் பிள்ளை முதலியோர் ஆவர்.

அருளுசலக் கவிராயரின் இராம நாடகம் கீர்த்தஅன களாக இருந்தாலும் ஒரு சிறந்த இலக்கியமாகப் போற்றுதற்குரியது என்பதைப் புலவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

அத் தீந்தமிழ்ப் பாடல்களைக் கூத்து மேடைகளில் மட்டும் பாடவில்லை. இசையரங்குகளிலும் நீண்ட கால மாகப் பாடி வருகின்றனர். இந்தாவிபீஷணு லங்காபுரி ராஜ்யம்’, ‘எனக்குன் னிருபதம் கினைக்கவரமருள் வாய்’, ‘ஏன் பள்ளிகொண்டிரையா? முதலிய பாடல் களை அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் உள்ளிட்ட இசைப் புலவர்கள் பலர் பாடக் கேட்டிருக்கிறேன். கோபாலகிருஷ்ண பாரதியாரின் கந்தனர் சரித்திரக் கீர்த் தனைகள் நாடக மேடைகளில் மட்டுமல்லாது இசை யரங்குகளிலும் கதா காலட்சேபங்களிலும் பல ஆண்டு களாக இடம் பெற்று வருவதை நாம் எல்லோரும் அறி வோம். கந்தனர் கதையை கடிக்கத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நாடக மேடையில், கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல்களே பாடப்பெற்று