பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


பேருக்கும் தனித்தனி அறைகள்; அப்படியே காட்சியும் அமைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு அறையின் கத விலும் ஆள் உயரத்தில் அந்தந்த கங்கையரின் உருவம் வரையப்பட்டிருக்கும். இந்த அழகு ஓவியங்களைப் பார்த்து பிரமிக்காதவர்களே இலர் என்று சொல்லலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் காட்சிகளெல்லாம் காலத்தால் அழிந்துபட்ட நாளிலும்கூட ஓவியம் வரையப்பட்ட அந்த ஆறு கதவுகளையும் மாத்திரம் காங்கள் மேலும் பல ஆண்டுகள் போற்றி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தோம். 1928-ஆம் ஆண்டிலேயே ஓவியர் கே. மாதவன் அந்த அளவுக்குத் திறமை படைத்தவராக விளங்கினர்

மற்றாெரு சிறந்த ஒ வியக் கலைஞர் திரு வி. மாதவன் பிள்ளை. திரு. ஜெகந்நாதையர் அவர்களின் மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபை முதல் நவாப் திரு டி. எஸ். இராஜமாணிக்கம் நாடகக்குழு வரை இவர் சிறந்த முறையில் பணிபுரிந்திருக்கிறார், நவாப் அவர்களின் பல நாடகங்களில் இவரது கை வண்ண த்தைக் கண்டு மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள். சக்தி நாடகசபாவில் ஒவியர் மாதவன் பிள்ளை காட்சியமைப்பு முறைகளிலே பல புதுமைகளைப் புகுத்தி வெற்றி பெற்றிருக்கிரு ரென்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

‘இராஜ ராஜ சோழன்’ நாடகத்திற்குரிய அழகிய காட்சிகளை ஓவியர் மாதவன்பிள்ளை அவர்களும் ஓவியர் தர்மராஜ் அவர்களுமே வரைந்தனர் என்பதைப் பெருமை யோடு சொல்லிக் கொள்ளுவேன். திரு. ஆர். எஸ். மனேகர், திருமதி எம். எஸ். திரெளபதி ஆகியோரின் காடக மன்றங்களுக்கும் திரு. தர்மராஜ் அவர்களே ஓவியக்கலைப் பணியாற்றி வருகிருரென்பதையும் மகிழ் வோடு குறிப்பிட விரும்புகிறேன்