பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§o

காடகத் துறையில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும பாலோர் ஆங்கிலம் அறியாதவர்களா யிருந்தாலும், இவ்வாறு நாடகத் துறையில் பேச்சு வழக்கிலிருந்த எல்லாச் சொற்களும் ஆங்கிலத்தில்தான் வழங்கி வந்தன. அவை ஆங்கிலச் சொற்களென்றே அப்போது எங்களுக்குத் தெரியாது. இவற்றையெல்லாம் தமிழ்’ என்றே அந்த காளில் கினைத்தோம். மொழியறிவும் உணர்வும் எங்களுக்கு ஏற்பட்ட பிறகுதான் இவை யெல்லாம் ஆங்கிலம் என்று தெரிந்து கொண்டோம். இன்றும் இந்தச் சொற்களில் பெரும் பகுதி கம்மை விட்டுப் போகவில்லை. இதிலிருந்து கான் கற்றுக் கொண்ட முதல் பாடம் இதுதான்.

நாடகம் கமக்குப் புராதனமானதாக இருந்தும் இத் துறையில காம் பன்னெடுங்காலமாகவே ஆங்கிலச் சொற்களை ஏற்றுக் கொண்டு இருப்பதன் காரணம் நமக்குப் பொதுவாக மொழி உணர்வு இல்லாததே. பல ஆண்டுகளாகவே தமிழர்கள் தம் தாய் மொழியைப் புறக்கணித்து வந்திருச்கிறார்கள் என்பதே உண்மை. இதை மறைத்துப் பயன் இல்லை. இந்த கிலே உறுதி யாக மாற்றப் பெறவேண்டும் தமிழர்கள் மொழிப்பற்று உடையவர்களாக வாழவேண்டும். அதிலும் காடகத் துறைக் கலைஞர்கள் இந்த உணர்வைத் தம் வாழ்வின் உயிராகக் கொள்ளல் வேண்டும்.

அறிவுரை வழங்கும் தகுதி

இரண்டாவதாக கான் கற்றுக் கொண்ட பாடம் காடகத்துறையில் இருப்பவர்கள் தீய பழக்கங்களில் லாமல் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும் என்பது.