பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


மூலம் எனக்குக் கிடைத்த பாடங்கள்தான், என்றால் அது முற்றிலும் உண்மை. துன்பங்கள் ஏற்படும் வேளைகளில் நான் கடித்துள்ள நாடகக் காட்சிகள் என் மனக்கண் முன்னே வந்து கிற்கும். நாடகப் பாத்திரங் களையும், அவர்களின் சோக நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்ப்பேன். இதைவிடவா காம் அதிகமான துன் பத்தை அனுபவிக்கிருேம்; இந்தத் துன்பத்திலும் இன்பத்தைக் காண முயல வேண்டும் என்ற முடிவுக்கு வருவேன். துன்பங்களை மறந்துவிட்டு மகிழ்ச்சியோடு இருக்க முயல்வேன். இப்படிப் பலமுறை என் வாழ் வைத் திருத்திக் கொள்ள நாடகத்துறை எனக்கு கல் லிடமாக இருந்தது என்பதை நன்றியோடு குறிப்பிட

விரும்புகிறேன்.

காப்பியடிக்காதே

நான்காவதாக, கடிப்பைப பொறுத்தவரையில் நான் கற்றுக்கொண்ட பாடம், எந்த கடிகனும் ஒரு வனைப் பார்த்துக் காப்பி யடிக்கக்கூடாது என்பது. ஒவ்வொருவருடைய நடிப்பிலும் தனித்தன்மை இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு. ஒருவரைப்போல் மற் றொருவர் நடித்துக் காட்டுவதென்பது ஒரு தனிக் கலை அந்தக் கலையிலும் கடிகன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆல்ை, தான் எடுத்துக்கொண்ட பல்வேறு குணப்பண்புகளைக் கொண்ட பாத்திரங்களில், ஒரு கடிகரைப் போலவே பின்பற்றி கடிக்க முயல்வது விரும்பத்தக்கதன்று. தனக்கு என்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை ஒத்திகையின்போது டைரக்டர் ராஜா சாண்டோ அவர்கள் கடித்துக் காட்டியதைப்போல் கானும் அப்படியே கடித்துக் காண்பித்தேன். அப்