பக்கம்:நாடகத் தமிழ்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

பிடித்து கயிறுகளின் மீது நின்றாடும் கூத்தாகும். இது கூழைக் கூத்தின் ஒரு பகுதி போலும் ; இது முற்காலத்தில் ஆரியர் என்னும் ஜாதியார் ஆடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்திலிருந்து சாக்கைக் கூத்து என்று ஒரு வகைக் கூத்து முற்காலத்தில் இருந்ததாக அறிகிறோம். சாக்கைக் கூத்து என்பதற்கு சாக்கையன் ஆடுங்கூத்து என்று பொருள் செய்யப்பட்டிருக்கிறது. சாக்கையன் என்பான் கோயில்களிலும் அரண்மனைகளிலும் முற்காலத்தில் பாடியாடும் ஒரு ஜாதியைச் சார்ந்தவன் என அறிகிறோம். 'கூத்தச் சாக்கையன் ஆடலின்’ எனச் சிலப்பதிகாரத்துள் வரைந்திருப்பதைக் காண்க. தற்காலத்திலும் கோயில் களில் பூஜாகாலங்களில் தேவதாசிகள் ஆடும் ஆடல் ஒருவகைத் துண்டு. ஆகவே சாக்கைக் கூத்தென்பது அதுபோன்றதாயிருக்கலாம் என ஊகிக்கலாம். அதற்கு மேல் நிச்சயமாகச் சொல்ல காரணங்களில்லை.

இனி முன்னர் கூத்துகளை வேத்தியல் பொதுவியல் என இரு வகைத்து எனக் கூறியதற்கு வேத்தியல் என்றால் வேந்தன்முன் ஆடும் கூத்தெனவும், பொதுவியல் என்றால் சாதாரண ஜனங்கள் முன் ஆடுங்கூத்தெனவும் பொருள் கொள்வர் சிலர் ; வேத்தியல் என்றது அகக்கூத்தினையும் பொதுவியல் என்பது புறக்கூத்தினையும் குறிப்பதாகும் என்பார் சிலர்.

மேற்கூறிய வகைகளன்றி கானகக்கூத்து என்றும் ஒர் வகைக் கூத்து முற்காலத்தில் இருந்ததாக அறிகிறோம். தொல்காப்பியம் பொருளதிகார உரையில் 'கானகக் கூத்தும் கழைக் கூத்தும் ஆடு பவராகச் சாதிவரையறையிலராதலின்’ என்று கூறப்பட்டிருப்பதைக் காண்க.

இன்னும் வாசாப்பு என்று ஒர்வகைக் கூத்து மத்திமகாலத்தில் இருந்ததாகத் தெரிய வருகிறது; யாழ்ப்பாணத்து அகராதியில் வாசாப்பு-ஒர்வகைக் கூத்து, என்று கூறப்பட்டிருக்கிறது. நான் குடியிருக்கும் வீட்டின் அருகாமையில் ஓர் இடத்துக்கு வாசாப்பு மேடு என்று பெயர் உண்டு. இதைப்பற்றி விசாரித்ததில் இவ்விடத்தில் அநேக வருஷங்களுக்கு முன்பாக கூத்தாடுவது வழக்கமெனத் தெரியலானேன். புதுச்சேரிக் கடுத்த ஒரு கிராமத்தில் சில வருஷங்களுக்கு முன்பாகத் தமிழில் கூத்து நடப்பதாயும் அதற்கு வாசாப்பு என்கிற பெயர் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/14&oldid=1285069" இலிருந்து மீள்விக்கப்பட்டது