பக்கம்:நாடகத் தமிழ்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

யாவரும் புகழ்ந்து வணங்க வைக்கப்பட்டிருந்தது. அந் நால்வகை வருண பூதர்கள் வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்த கேஸ்வரன் ஆம், சில பூர்வாசாரியர்கள் இவ்விடம் நந்தியென்னும் தெய்வமுமமைக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் சுத்தன் நந்தப்பிரகாசமென்னும் நூலில் மேற்கூறியவைகளுடன் 'கோவும், யானேயும், குரங்கும், பிச்சனும். பாவையும் பாங்குடைப் புருஷா மிருகமும்' எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும் காலையில் எழுந்தவுடன் யானை, குரங்கு, பிச்சன் முதலியவைகளைக் காணல் நல்லது என்று கருதப்படுவது கவனிக்கத்தக்கது: இவைகளெல்லாம் திருஷ்டி பரிஹாரமாகவும் நற்சகுனங்களாகவும் அமைக்கப்பட்டனபோலும், நாடக சாலைக்கு களரி என்றும் பெயர். களரி கூட்டுதல், களரி கட்டுதல் என்பதைக் காண்க.

மேலும் பூர்வகாலத்தில் கூத்தானது எப்பொழுதும் இராக் காலங்களிலேயே நிகழ்ந்தமையால் அரங்கத்தின்மீது விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன, அன்றியும் தூண்களின் நிழல் நாயர்பத்தியின் கண்ணும் அவையின் கண்ணும் படாதபடி பெரிய நிலை விளக்குகளாயிருந்தன என அறிகிறோம். கூத்துக்காண்போர் இருக்கைக்கு அம்பலம் என்று பெயர்.

பூர்வகாலத்தில் கூத்தாடுமரங்கத்தில் மூவகைத் திரைகள் கட்டப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது. இத்திரைகளுக்கு எழினி என்ற பெயராகும். அம்மூவகை யெழினிகள், ஒருமுகவெழினி, பொருமுகவெழினி, கரந்துவரல் எழினியாம், இடத்துரணிலையிடத்தெ உருவு திரையாக ஒருமுகவெழினியும், இரண்டு வலத்தூனிடத்தும் உருவு திரையாக பொருமுகவெழினியும், மேற்கட்டுத் திரையாகக் கரந்துவரலெழினியும் கட்டப்பட்டிருந்தன. ஒருமுக வெழினியென்பது ஒரு பக்கம் தள்ளக்கூடிய திரையாகும்; இதற்கு ஓடு படம் என்றும் பெயருண்டு. பொருமுகவெழினி என்பது இடையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு பக்கமும் தள்ளக்கூடிய திரையாகும்; கரந்துவரல் எழினி என்பது மேலே கட்டப்பட்டு கீழ் இறங்கிவரவும் மேலே மறைந்து செல்லக்கூடியதுமான திரையாகும்; இதற்கு எந்திரவெழினியென்றும் பெயர்; அதாவது சூத்திரத்தால் எழவும் விழவும் கூடிய திரையாம். மேற்கட்டுத் திரையாய் நிற்பது ஆகாய சாரிகளாய்த் தோன்றுவார்க்கெனக் கொள்க; என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். ஆகவே பூர்வகாலத்தில் நாடகங்களில் ஆகாயசாரிகளைக் குறிப்பதற்காகப் பிரத்யேகமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததென அறிகிறோம். கரந்துவரலெழினி கோலமறைந்து வருமிடத்தில் இடப்படுவதென, டாக்டர் மஹா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/27&oldid=1287618" இலிருந்து மீள்விக்கப்பட்டது