பக்கம்:நாடகத் தமிழ்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

 ஆவியெனும் மூன்றையும் தமிழுக்கு அர்ப்பணம் செய்தது போல் உழைத்துவந்த பாஷாபிமானியும், மஹா வித்வானுமான, மஹாம ஹோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களைப் போன்ற கல்விச் சிரோன்மணிகள் வெளிப்படுத்தி வந்தமையால் அக்குறை நீங்கலாயிற்று என்று உறுதியாய்க் கூறலாம்.

நாமறிந்தவற்றுள் நாடகத் தமிழைப்பற்றிக் கூறியுள்ள நூல்களுள் அகத்தியம் என்பதையே முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். இந்நூல் கடல் கொண்ட தென்மதுரையிலிருந்த தலைச்சங்கத்துப் புலவருள் ஒருவராகிய அகத்தியர் என்பாரால் செய்யப்பட்டதாம். இது இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணத்தையும் அறிவிப்பதாகிய ஓர் பெரிய இலக்கண நூல். இது உரையாசிரியருட் சிறந்தோராகிய நச்சினார்க்கினியர் என்பவர் காலத்திலேயே இறந்துவிட்டதாக அறிகிறோம். பழைய உரைநூல்களில் அகத்தியத்திலுள்ள சில சூத்திரங்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. முதற்சங்கம் இடைச்சங்கமென இரண்டு சங்கங்கள் இருந்தனவோ இல்லேயோ, எங்ஙனமிருந்தும் அகத்தியமானது நாடகத்தமிழைப் பற்றி வரைந்துள்ள ஒரு மிகவும் பழைய நூல் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை.

தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாடகங்கள் இருந்தன வென்பதற்குப் பொருளதிகாரம், அகத்திணையியல் 53 வது சூத்திரத்தில் 'நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்" என்று கூறியிருப்பதே போதுமான அத்தாட்சியாகும். அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப்பாயிர உரையில், நாடகத் தமிழ் நூல்களாகிய 'பரதம், அகத்தியம், முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன.” என்று கூறியுள்ளார். ஆகவே அகத்தியத்தைப்போன்ற பழமையான நாடகவிலக்கணம் கூறும் நூல் பரதம் என்று ஒன்று முற்காலத்தில் இருந்ததாக நாம் அறிகிருேம். பெயரை நோக்குமிடத்து, அகத்தியர் செய்த நூலுக்கு எப்படி அகத்தியம் என்று பெயர் வந்ததோ, அப்படியே பரதர் என்பார் செய்த நூலுக்கு பரதம் என்கிற பெயர் வந்திருக்கலாமெனத் தோற்றுகிறது, பரத சாஸ்திரம் என்கிற நாடக சம்பந்தமான ஒரு சம்ஸ்கிரத நூல் பரதர் என்பவரால் செய்யப்பட்டது ஒன்றுளது. இதை நோக்குமிடத்து, எங்ஙனம் அகத்தியர், சம்ஸ்கிருதம் தமிழ் என்னும் இரண்டு பாஷைகளிலும், வல்லுனராயிருந்து அவ்விரண்டு பாஷைகளிலும் நூல்களை இயற்றினாரோ, அங்ஙனமே பரதர் என்பவர் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நாடக நூல்களைச் செய்திருக்கலாம் என்று கருத இடங்கொடுக்கிறது. தற்காலத்திலும் கூத்தின் ஒருவகையாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/4&oldid=1282997" இலிருந்து மீள்விக்கப்பட்டது