பக்கம்:நாடகத் தமிழ்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கேழ்விப்படி, சாந்திக் கூத்தன், திருவாளன் திருமுதுகுன்றான விஜய ராஜேஸ்வர ஆசார்யனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகக் கொடுத்தே பெற்றா............. ............ ......" இக் கல்வெட்டுகள் சோழராஜனாகிய ராஜேந்திர தேவர் காலத்தைச் சேர்ந்தன. இதனால் நாம் அறியத்தக்க விஷயங்கள் பல உள. முதலாவது ராஜேந்திரதேவர் காலமாகிய அக்காலத்தில், தமிழ் நாடகங்கள் வழங்கி வந்தனவென்பதாம். அவைகள் சாதாரணமாக கோயில்களின் உற்சவ காலத்தில் நடத்தப்பட்டன வென்பதும் வெளிப்படையாம் ; தற்காலமிருப்பதுபோல கிராமதேவதைகளின் கோயில்களில் மாத்திரமன்றி பெருங்கோயில்களிலும் உற்சவ காலத்தில் இவ்வழக்கம் இருந்திருக்க வேண்டும், அன்றியும் கோயில்களிலுள்ளே நாடகங்கள் அக்காலத்தில் நடத்தப்பட்டபடியால் அவை மிகவும் கீழ்ப்பட்டனவாக அக்காலத்தில் மதிக்கப்படவில்லை யென்பதும் புலப்படும். மேலும் தற்காலம் சில கோயில்களில் தாசிகள் நாடகம் நடத்துவது போலல்லாமல் ஆண்மக்களும் நாடக மாடினர் என்பது தெற்றென விளங்குகிறது. அன்றியும் அந்நாடகமாடுபவர்களில் முக்கியமானவனுடைய பெயரைச் சொல்லும் பொழுது திருவாளன் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; அவன் சாமன்யமானவனாய் இருந்தால் அப்பதம் அவனது பெயர் முன் வரையப்பட்டிராது என்பது திண்ணம். அல்லாமலும் அவனைச் சாந்திக்கூத்தன் என்று குறிப்பிட்டது நமக்கு மிகவும் உபயோகமாயிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வகுக்கப்பட்ட சாந்திக்கூத்தானது ராஜேந்திரதேவர் சோழன் காலமாகிய சுமார் ஆயிரம் வருஷத்திற்கு முன்னிலும் வழக்கத்திலிருந்தது என்று நன்றாய் நிரூபிக்கப்படுகிறது. ராஜராஜேஸ்வரன் ஆள ஆரம்பித்த காலம் கி.பி.884 ஆம். சாந்தி கூத்தாடுபவனே சாந்திக்கூத்தன் ஆவான்.

இவ்வளவாவது ஒரு பூர்வீகத் தமிழ் நாடகத்தைப் பற்றி நமக்கு விவரம் கிடைத்ததே என்று நாம் கொஞ்சம் சந்தோஷப்படுவதற்கு இடம் கொடுத்த போதிலும், அத்தமிழ்நாடகத்தின் பெயரன்றி, நாடகத்தின் கதை விவரம் ஏதும் கிடைத்திலதே என்று நாம் துக்கப்படக் காரணமாயிருக்கிறது. மேற்கூறிய கல்வெட்டுகளை வெளிப்படுத்திய கவர்ன்மென்ட் கல்வெட்டுப் பரீட்சகர், இந்த ராஜராஜேஸ் வர நாடகத்தின் கதையானது, ராஜராஜ சோழனால் தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயில் கட்டிய கதையென்பதற்குச் சந்தேகமில்லை யென்று கூறியிருக்கிறார், அவருடைய பேரறிவை மெச்சி, அவர் தமிழுலகத்திற்குச் செய்த பெரும் உதவியைச் சீர்தூக்கவேண்டியவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/52&oldid=1290146" இலிருந்து மீள்விக்கப்பட்டது