பக்கம்:நாடகத் தமிழ்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

களில் இயற்றப்பட்டன என்று நிர்ணயிப்பதற்கு போதுமான ஆதாரமில்லை. சாதாரணமாக ஓலைப்புஸ்தகங்களில், அச்சிடப்பட்ட புஸ்தகங்களிலிருப்பதுபோல், இன்ன வருஷம் எழுதப்பட்டது என்று குறிப்பிடுவதில்லை. பாண்டி கேளிவிலாச நாடகம் தஞ்சாவூரையாண்ட சிவாஜி மகாராஜாவின் காலத்தில் இயற்றப்பட்டதால், இப்போதைக்கு சுமார் 150 வருஷங்களுக்கு முன் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்று நிச்சயிக்கலாம்.

மேற்குறித்த நாடகங்களன்றி, இத்தஞ்சை ஏட்டுப் பிரதிகளுள் "சுபத்திரைக் கல்யாணம்" என்பது அகவல், தரு, விருத்தம், சிந்து, முதலியன விரவி நாடகம்போற் செய்யப்பட்டுள்ளதென, அவ்வேட்டுப் பிரதிகளே மிகவும் பிரயாசைப்பட்டு பரிசோதித்த உலகநாத பிள்ளை எனும் தமிழ்ப் பண்டிதர் எழுதியிருக்கிறார். இதைச் செய்த ஆசிரியர் பெயர் நன்னிலம் நாரணன் என்பதாம்,

அன்றியும் சென்னை துரைத்தனத்தார் ஏற்படுத்தியிருக்கும் பழைய ஏட்டுப் புஸ்தகசாலையில், முப்பது தமிழ் நாடகங்களுக்கு மேல் இருக்கின்றன. அவையாவன :


(1) இரணிய சம்ஹார நாடகம் :- இது மிகவும் பழைய ஏட்டுப் பிரதியாகத் தோன்றுகிறது, மிகவும் சிதிலமாய்க் கிடக்கிறது, எடுத்துப் பார்க்கும்பொழுது ஏடுகள் துாள் தூளாகிப் போகின்றன, இதில் வசனமும் தருக்களும், விருத்தங்கள் முதலியனவும் அடங்கியிருக்கின்றன. இப்புஸ்தகத்தின் முதல் ஏடு இல்லை; நாடகத்தின் கதை மஹாவிஷ்னு நான்காவது அவதாரமெடுத்து, பக்தனாகிய பிரஹ்லாதாழ்வாருக்காகத் தூணில் தோன்றி ஹிரண்யாசுரனைக் கொன்றதாம். இப்புஸ்தகத்தில் மல்லர்கள் ஆயுதங்களைக்கொண்டு பிரஹ்லாதரை வருத்துகையில் அவர் மஹாவிஷ்ணுவைத் துதிக்கும் வரையில் தானிருக்கிறது. கடைசியில் வேறு சுவடியின் சில ஏடுகள் சில சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் கட்டியக்காரன் வருகிற தருவில், அவன் சல்லடம் பூண்டிருப்பதாயும், சால் வயிறுடையவனாகவும் வர்ணித்திருக்கிறது. கட்டியக்காரனே அகசியக் காரணுகவும் இதில் வருவது கவனிக்கத்தக்கது, செய்யுள் நடையும் வசன நடையும் மிகவும் பிழையுள்ளதாயிருக்கிறது; விருத்தம் என்பதற்கு விருற்றம் என்று எழுதியிருக்கிறது; இது ஆசிரியர் குற்றமோ அல்லது எழுதியவர் குற்றமோ கூறுவதற்கில்லை. இச் சுவடியில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/56&oldid=1290150" இலிருந்து மீள்விக்கப்பட்டது