பக்கம்:நாடகத் தமிழ்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தற்காலத்தில் அச்சிடப்படும் தமிழ் நாடகங்கள் பெரும்பாலும் இதிகாச புராணக் கதைகளைத் தழுவின வாயிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயமே இத்தகைய நாடகங்களுக்கு உதாரணமாக, அரிச்சந்திரன், பாதுகா பட்டாபிஷேகம், உத்தசை உஷாபரிணயம், கீசகன்,சீதா கல்யாணம், சாவித்திரி, தமயந்தி பீஷ்மஜன்னம், பாமாவிஜயம். மாருதிவிஜயம். ராமலிலா, ருக்மிணி கல்யாணம், வள்ளித் திருமணம், சகாதேவன் சூழ்ச்சி, யயாதி, காலவரிஷி, ஊர்வசியின் சாபம், சுபத்திரார்ஜுணா, கொடையாளி கர்ணன் முதலியவற்றைக் கூறலாம். இவையன்றி மிகுந்தவைகளில் பெரும்பாலும் பக்திரசமமைந்த நாடகங்களாயிருக்கின்றன. இவைகட்கு உதாரணமாக ராமதாஸ் சரித்திரம் மாணிக்கவாசக சரித்திரம். பட்டினத்தார் சரித்திரம், ஸ்ரீசங்கராச்சாரியார் நாடகம், ராமாநுஜாச்சாரியார் நாடகம், தொண்டரடிப்பொடி யாழ்வார் சரித்திரம், நந்தனர், பிரஹலாதன், மீராபாய், ஸ்ரீவீரராகவா, மார்க்கண்டேயர், சிறுத்தொண்டர் முதலியவற்றைக் கூறலாம்.

தற்காலத்தில் வெளிவந்திருக்கும் புதிய கற்பனை நாடகங்களுக்கு உதாரணமாக ரூபாவதி, கலாவதி, இரண்டு சகோதரர்கள், காந்தாமணி மாயாவதி, ராஜலட்சுமி, ராஜசேகரன். லீலாதரன், வாலந்திகை, லீலாவதி சுலோசணு, கள்வர் தலைவன், மனோஹரன், இரண்டு நண்பர்கள், நற்குலதெய்வம், சத்ருஜித், காதலர் கண்கள், பேயல்ல பெண்மணியே, மெய்க்காதல், புஷ்பவல்லி, வேதாள உலகம்,முதலியவற்றைக் கூறலாம். இவைகளே விசித்திரக் கதை நாடகப் பிரிவில் அடங்கினவாகக் கூறலாம்.

ஆங்கிலேய பாஷையில் சோஷல் டிராமா என்று சொல்லப்பட்ட ஜனசமூக நாடகம், அல்லது தற்காலத்திய நாகரீக நாடகப் பிரிவுள் தமிழில் சில நாடகங்கள்தான் வெளியாயுள்ளன; அவைகளுக்கு உதாரணமாக வனஜாட்சி, காலத்தின் கோலம்: கூட்டுறவு நாடகம், மகர பஞ்சாட்சரம், பொன் விலங்குகள், விஜயரங்கம், சபாபதி, பொங்கல் பண்டிகை, ஒரு ஒத்திகை, மனைவியால் மீண்டவன், தாசிப்பெண். இடை சுவர் இருபுறமும், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, விச்சுவின் மனைவி, என்பவைகளைக் கூறலாம்.

அன்றியும் தற்காலம் வெளிவ்ரும் தமிழ் நாடகங்களை ஆராயுமிடத்து சரித்திர சம்பந்தமான நாடகங்கள் மிகவும் சிலவென்றே கூறல் வேண்டும். இவைகளுக்கு உதாரணமாக, தஞ்சைநாயகர் தாழ்வு போஜசரித்திரம், பூதத்தம்பி விலாசம், பிரித்விராஜ், ரஜபுத்ர வீரன், புத்த அவதாரம், முதலியவற்றை ஒருவாறு இப்பிரிவுக்கு உதாரணமாகக் கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/72&oldid=1290237" இலிருந்து மீள்விக்கப்பட்டது