பக்கம்:நாடகத் தமிழ்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

சாம்பிரதாயத்தை ஒத்திருக்கும். அதற்குக் காரணம் அவர் வடக்கிலிருந்து வந்த நாடகக் கம்பெனியைப் பார்த்து அதைப்போலத் தாமும் நாடக ஏற்பாடுகளைச் செய்ததே போலும். ரங்கத்தின் திரைக்குப்பின் வினாயகர், சரஸ்வதி, அவர் வழிபடு கடவுளாகிய நீராமர் முதலியோருடைய ஸ்தோத்திரம் ஆனபின் அவரே சூத்திரதரகை திரைக்கு வெளிவருவார்; பிறகு பஞ்சதாதன் எனும் முன்பு கூறப்பட்டவன் விதுரவடிகளாக வந்து, வேப்பிடையைத் தலையிற் கட்டிக்கொண்டு ஆடுவான். ஆடியபிறகு இவர்களிருவர்களுடைய தர்க்கத்தினால், இன்ன நாடகம் நடக்கப்போகின்றதென்றும். அதன் கதை இன்னதென்று சபையோர்கள் அறிவார்கள், பிறகு நாடகம் ஆரம்பமாகும். நடர்களை 'குடி முதலிய துர்வழக்கங்கள் இல்லாமலும். துன்மார்க்க வழியில் செல்லாமலும், மேடையின்மீது ஆபாசமான வார்த்தைகளை உபயோகியாமலும், சீர்திருத்திக்கொண்டு வந்தவர்களில் இவரை முதலாகச் சொல்லலாம். இவருக்கு வயதான பிறகு, இந் நாடகக் கூட்டத்தில் பிரிவுண்டாகி, கோனேரிராவ் என்பவர் ஒரு நாடகக் கம்பெனியும், சுந்தர ராவ் என்பவர் வேறொரு நாடகக் கம்பெனியும் ஸ்தாபித்து நடத்தி வந்தார்கள். பிறகு இவ்விரண்டு கம்பெனிகளும் சில வருஷங்களுக்குள் அற்றுப்போயின. நம்முடைய தேசத்தில் ஐக்கியம் அழிந்து, பிரிவு உண்டாவதினால் எல்லாம் கெட்டுப்பேகின்றது என்பதற்கு இந்நாடக சபைகளும் உதாரணமாயின.

சற்றேறக்குறைய இதேகாலத்தில் சுப்பராயாச்சாரி நாடகக் கம்பெனி என்று ஒன்றிருந்தது. இதற்குத் தலைவர் சுப்பராயாச்சாரி எனும் கம்மாளர், இவர் பெங்களுரிலிருந்த அப்பாவு பிள்ளை என்பவருடைய சிஷ்யர். இவர் பெரும்பாலும் தன் ஆசிரியரால் இயற்றப்பட்ட சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம் எனும் நாடகத்தைத் தான் நடத்துவார். இவர் சனிக்கிழமைதோறும்தான் நாடகம் நடத்துவார். ஹரிச்சந்திரவிலாசம் ஆரம்பித்தால் ஏழு அல்லது எட்டு சனிக்கிழமைகளில் ஒவ்வொரு பாகமாக நடத்தி, கடைசியில் ஹரிச்சந்திரன் பட்டாபிஷேகம் என நடத்துவார். இவர் சபையில் துரைசாமி என்பவன் சந்திரமதியாக நடிப்பான், இவர்களிருவரும் ஹரிச்சந்திரன் சந்திரமதி வேஷத்தில் நிகரற்றவர்களெனப் பெயர்பெற்றிருந்தனர், அக்காலம் இவர்கள் சாதாரணமாக நாடகம் நடத்திய கொட்டகை, இப்பொழுது தான் வசிக்கும் வீட்டிற்கு சுமார் நூறு கஜத்திற்குள் இருந்தது. இரவில் பத்துமணிக்குமேல் இரண்டு மூன்று மணிவரையில் சனிக்கிழமைகளில் இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/83&oldid=1296440" இலிருந்து மீள்விக்கப்பட்டது