பக்கம்:நாடகத் தமிழ்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

இதைப்போன்ற தமிழ் நாடகசபைகள் சென்னையில் உண்டானதே யாம். அப்படிப் பிறந்த சபைகளில் முக்கியமானதாகச் சுகுண விலாசசபையை எடுத்துக்கூறலாம். இச்சபை 1891-ம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி ஸ்தாபிக்கப்பட்து.


முற்றிற்று.



அனுபந்தம்

தோடயம்

இராகம் நாட்டை - தாளம் ஜம்பை

தடையிலனிதரு சோமா சகமகிழ் சகஸ்த்ர நாமா
தழையிதழி மலர்த்தாமா சரவசரபூமா-ஜெயஜெயா
விடையில் வரு மகதேவா விரிமறை கணமொழி நாவா
வினையினருள் பெறக்காவா விரைகொளடிபூவா-ஜெயஜெயா
இடைமருவு புலித்தோலா இலகுகரத்திரி சூலா
இனியகர மதில் நீல இறைவியொரு பாலா -ஜெயஜெயா
நடையுக நடையுலாசா கயிலைமலைதனில் வாசா
கருணையருளு மஹேசா கருதுமறை நேசா-ஜெயஜெயா


மங்களம்

இராகம் ஆநந்தபைரவி - தாளம் திரிபுடை


சிவநாதந்தனியாயுற்றுப் பரமோதந்தனயே பெற்றுக்
கலைமறிவாய் செறியாய் கதிர்மதி பிறிவாய் அறிவாயிலகிடு
மொளிவரு சித்திகள் பற்பலமகிமைகள் தருசிம் பரமுத்தியினிலைபெற
வரவர வருள் பெருகிட முடிமிசை நிதம் நடமிடும் நிருமலபொருட்டுகுறன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/87&oldid=1540549" இலிருந்து மீள்விக்கப்பட்டது