பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் எழுதித் தயாரித்த பண் புள்ள பரதன் ? என்ற புராண நாடகம் நடைபெற்றது. தசரதனு டைய தர்பார் காட்சியில், அரசன் மற்றும் மந்திரி பிரதானிகள் உட்காருவதற்கான ஆசனங்களுக் காக சாதாரண ஸ்டீல் (Steel) நாற்காலிகள் தான் தயார் செய்து வைத் திருந்தனர் விழாக் குழுவினர் பழைய கால முறையில் சிம்மாசனம் போன்ற ஆசனங்கள் தயார் செய்ய வழியில்லா விட்டாலும் பரவாயில்லே-கருப்பு அல்லது வேறு கலர் துணிகளேயாவது கொண்டு வந்து அந்த ஸ்டீல் நாற்காலிகளின் மேல் போட்டு மூடி வை யுங்கள். ஒரளவு இயற்கையாகவாவது இருக்கும்.’’ என்று கூறினேன். அதற்கு அவர்கள் சிறுவர்கள் நடிக்கும் நாடகம் தானேசார்! இதில் எதற்கு இவ்வளவு கவனம் செய்கிறீர்கள்? என்று சலித்துக் கொண் டனர். இந்தச் சிறு விஷயத்தைக் கூட உங்க ளால் சரியாகச் செய்ய முடியவில்லையே! பின் ஏன் புராண நாடகம் போட வேண்டும்? என்று ஆசைப்படுகிறீர்கள்?? ? என்று அவர்களேத் திருப் பிக்கேட்டேன். செலவைக் கூடப் பொருட்படுத்தாது நடி கர்களின் உடை, ஒப்பனே போன்ற விஷயங்களில் என் கருத்துப்படியே செய்தவர்கள், இந்தச்சிறு விஷயத்தைக் கவனித்துச் செய்வதற்கு அவ்வாறு சலித்துக் கொள் வானேன்? அசிரத்தைதான் அதற்குக் காரணம்! நாடகம் என்ற ஒரு நிகழ்ச்சியையே அவர் கள் நடத்த விரும்புகிருர்களேயன்றி அந்த நாட கத்தை ஒரு கலேயாக மதித்து, சிரத்தையோடு