பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகப் பண்புகள்! | ಫಿರಿ $L5, ಹಿಂತಿವೆ: ಖಂpಹಿ § இன்றைய நிலையும். "அக்கலையும் இக்கலையும் ஆய்ந்தறிவார் நாடகத்தை எக்கலையும் கூடும் இயல்பென்பார் முக்கலையாம் செந்தமிழில் நாடகங்கள் சீர்பெற் றுயர்ந்திடவே வந்தமகா நாடு கிதம் வாழி ! " - கவிஞர் ச. து. சு. யோகி. நம் செந்தமிழ் நாட்டினிலே புகழதாம் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் கூத்து என்று சொல்லப்படும் நாடகம் ஆதி காலத்தில் மிகவும் சிறப்பான ஒரு இடத்தையே பெற்றிருந்தது ஆல்ை, இடைப்பட்ட காலத்தில் அந்தக் கூ த் து வளர்ச்சியடையாமல் மங்கியிருந்தது. இயலும், இசையும் நன்கு செழித்து வளர்ந்தன. இயல் துறையிலும், இசைத் துறையிலும் பல புதிய நூ ல் க ள் , சாகித்தியங்கள் உண்டாக்கப்பட்டு அவைகள் வளர்ந்தன. ஆல்ை நாடகத்தில் அந்த அளவுக்கு நல்ல நூல்கள் தோன்றவில்லை. நாடகத் தமிழும் வளரவில்லை.