பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–22– இயல்பான நடிப்பு இயல்பான நடிப்பு என்பது நடிகன் தன்னே மறந்து நடிக்கும் நடிப்பல்ல - தன்னே உணர்ந்து நடிப்பது. பாத்திரத்தோடு பாத்திரமாக ஒன்றிவிட் டான், அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்டான் என்று கூறுவது சரியான நடிப்பாக கருதமுடியாது. அந்தப் பாத்திரத்தின் த ன் ைம ைய அ வ ன் உணர்ந்து நடித்தான் என்று சொல்வதே பொருத் தமாகும். நடிப்பவன் அ ந் த ப் பாத்திரமாகவே மாறிவிட்டால் என்ன ஆகும்...? உதாரணமாக... பிரகலாதா நாடகத்தில் துண்ணேப் பிளந்து கொண்டு தோன்றும் நரசிம்ம அவதாரம் ஹிரண் யனே க் கொன்று, அவன் வயிற்றைக் கி ழி த் து குடலே மாலேயாக அணியும் காட்சியில் நரசிம்ம அவதாரமாக நடிக்கும் நடிகன் உண்மையிலேயே அந்தப் பாத்திரமாக மாறிவிட்டால் என்ன ஆகும்? மேடையில் கொலே அல்லவா நிகழ்ந்துவிடும் ! சாதாரணமாக அடிக்கும் காட்சிகளில் கூட அடிப்பதுபோலவும், அடிபடுவது போலவும் நன்கு பாவனே செய்வதுதான் நடிப்பு. நிஜமாகவே அடித் தால்தான் உண்மையான நடிப்பு எ ன் று கருது பேது தவறு. " இயலிலும் இசையிலும் நாடகம் அடங்காவிடினும் நாடத்தில் இயலும் இசையும் அ ட ங் கு ம் . பண்டைக்கால நாடகம் இசைச் சொல் கலந்த ஆடலையே அடிப்படையாகக் கொண்டது இ க் கால மேடை நாடகம் நடிப்பையே அடிப்படையாகக் கொண்டது.” _ கி. ஆடி பெ. விசுவநாதம்