பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ற பொது బ్రీ

விஷயங்கள் காட்சிகளில் நடிகர் கன் நடனை சூன் முறை. நாடகக் காட்சிகளில் நடிகர்கள் நுழைவ தகும், மேடையில் போஸ்கள் காட்டி நிற்பதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன. சாதாரணமாக அமெச்சூர் நாடகங்களில் அனேகமாக இவைகள் கையாளப்படுவது இல்லே. ஒரு வீடு அல்லது அலுவலகத்திற்கு வெளி யிலிருந்து வருபவன் மேடையின் இடது பக்கம் உள்ள வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும் மீண் இம் வெளியே போகும் பொழுது அந்தவாசல் வழியாகத் தான் போகவேண்டும். அதாவது மேடை கிழக்குப் பார்த்து அமைந்திருக்கிறது என் ருல் வடபுறத்தில் அமைத்துள்ள தட்டி வாசல் வழியாகத் தான் வரவேண்டும். வீட்டிற்குள்ளேயிருந்து வரும் காட்சிகளில் வலது பக்கமுள்ள வாசல் வழியாகத்தான் வர வேண்டும். ரோடு, பார்க் போன்ற காட்கிகளில் இரண்டு பக்கங்களிலிருந்தும் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி வந்து போகலாம். இது ஒரு ஒழுங்கான விதி முறையாகும். இதைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டியது மரபாகும். ” ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானல் அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களி டையே ஒழுங்கும். கியதியும், கட்டுப்பாடும் இருக்க வேண்டும் " தவத் திரு. சங்கரதாஸ் சுவாமிகள்