பக்கம்:நாடகவியல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ந | ட க வி ய ல் 367

நாடகம் 123. ஐந்திற் குறையா வங்க முடைத்தா

யொன்பான் சுவையு மொருங்குடைத் தாயினு

மின்ப மாதல் பெருமித மாதல்

செவ்விதிற் றெரிக்குஞ் சீரிற் முகி

வியப்புச் சுவையி னிறுவது நாடகம்.

ஐத்தில் குறையா - ஐந்து என்னும் தொகையுட் குறைவுபடாத, அங் கம் உடைத்தாய் - அங்கம் என்னும் பிரிவுகளையுடையதாய், ஒன்பான் சுவை யும் ஒன்பது சுவைகளும், ஒருங்கு உடைத்து ஆயினும்-முழுவதுங் தன்ன கத்துடையதாயினும்; இன்பம் ஆதல் - உவகைச் சுவையினேயாவது, பெரு மிதம் ஆதல் - வீரச்சுவையினேயாவது, செவ்விதில் தெரிக்கும் - செவ்வை யாகத் தெரிவிக்கும், சீரிற்று ஆகி - சிறப்பினேயுடையதாகி, வியப்பு சுவையின்வியப்புச்சுவையோடு, இறுவது - முற்றுப்பெறுவது,நாடகம் - நாடகமென்று சொல்லப்படும்.

குறிப்பு:-உவகைச் சுவையும் பெருமிதச் சுவையும் பெரிது விளங்க

இடையிடையே யேனேய சுவைகளும் விரவப்பெற்று இறுதியில் வியப்புச் சுவையினைக் கொண்டுமுடிந்த ஏழங்கநாடகமாகிய கலாவதி நாடகம் இதற் குதாரணமாதல் காண்க. உவகை பெருமிதம் வியப்பாதிய சுவைகளைப்பொது வியலிற் கண்டுதெளிக. அங்கம்:

'நாடகப் பேருறுப் பங்க மதுதான்

பலகள முடைத்தாய்ப் பண்புறு முடிவுகொண்

டிலகுறு வதுவா மிசைக்குங் காவே'

என்னும் இந்நூல் உறுப்பியல்பு 14-ஆம் சூத்திரத்தானுணர்க. இச்சூத்திாத் தானே நாடகத்துள் ஒன்பான் சுவையும் பயின்று வருமென்பது புலப் பட்டது. - (சு)

124. ஒன்பான் சுவையு முடைய துயர்வே

சிலகுறைக் தியலினுஞ் சீர்குன் முவே. ஒன்பான் சுவையும் உடையது உயர்வு - ஒன்பது சுவைகளையுமுடை யது உயர்ந்த சாதி நாடகமாம்; சில குறைந்து இயலிலும் - சில சுவைகள் வரப்பெழுது வழங்கப்படினும், சீர் குன்ரு (நாடகங்கள்) தமது சிறப்பிற் குறையாவாம்.

குறிப்பு:--இது மேலைச் சூத்திரத்திற்குப் புறனடையாம். சிலகுறைக் தியலினும் என்ற விடத்து உவகை பெருமிதம் வியப்பு நீங்கியஏனைய சுவை. களுட் சிலவென்று கொள்க. ஏனெனில் அம்மூன்று சுவையும் நாடகத்தின் கட் பயின்றே வால்வேண்டுமென்ப தொருதலையாதலின், ஏகாரம்: ஈற் றசை, - (எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/100&oldid=653462" இலிருந்து மீள்விக்கப்பட்டது