பக்கம்:நாடகவியல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ந | ட க வி ய ல் 403

வாழ்த்து-, நடாத்துகர்- முன்னுரை-, என பாத்து உரை விகற்பம் பயிலா சில உள - என்று பகுத்து உரைக் கப்பட்ட வேறுபாடுகள் பொருந்தாத நாடகங்களும் சில வுண்டு.

குறிப்பு:- வல்லிபரிணயம் முதலிய தமிழ் நாடகங்களும் வேனில் வணிகன் முதலிய ஆங்கில நாடகங்களும் இவற்றிற்குதாரணமாம். (கா.)

-- (டு) அங்கம் -- 187. நாடகப் பேருறுப் பங்க மதுதான்

பலகள முடைத்தாய்ப் பண்புறு முடிவுகொண் டிலகுறு வதுவா மிசைக்குங் காலே. நாடகம் பெருமை உறுப்பு அங்கம் - நாடகத்தின் பெரும்பகுதி அங்கம். என்னப்படும்; அதுதான் - அவ்வங்கம், இசைக்கும்கால் - இலக் கணம் சொல்லுமிடத்து, பலகளம் உடைத்து ஆய் - பலகளங்களைத் தன் னகத்துடையதாகி, பண்பு உறு முடிவு கொண்டு இலகுறுவது ஆம் - செவ் விதாகப் புலப்படும் முடிவினேப் பெற்று விளங்குவதாகும்.

குறிப்பு:-காவியங்களில் பெரும்பகுதிகளைக் காண்டமென்று வழங்கு வதுபோல நாடகங்களில் பெரும்பகுதிகளை அங்கமென்பர்.அங்கம்: உறுப்பு. ஒவ்வோரங்கமும் தனித் தனி யொருபகுதியின் முடிவுடன் நிற்கும் என் பதிதனுற் பெறப்பட்டது. ஏகாரம்: ஈற்றசை. ஆங்கிலத்தில் அங்கத்தினை Act oraoru. - - - (கச) கதைநிறைகளம் 188. அங்கங் தொடங்குமு னரியப் புலவோர்

சிற்சில விடத்துக் கதைகிறை களமென விழிபாத் திரங்க ளெய்தும் பொருளே மொழிபாக் குறுத்தலு முன்னர்க் கொள்ப. ஆரியம் புலவர் - வடமொழி நாடகப் புலவர்கள், அங்கம் தொடங் கும் முன் - நாடகப் பேருறுப்பாகிய அங்கத்தினே யாரம்பிப்பதற்கு முன், சில சில இடத்து - சிலவிடங்களில், இழி பாத்திரங்கள் - சே பாத்திரங்கள், எய்தும் பொருளை - நாடகத்தை விளக்குதற்கு இன்றியமையாது பொருந்தும் விடயத்தினே, மொழிபாக்கு - எடுத்துக்கூறுமாறு, கதை நிறை களம் என - கதைநிறை களம் என்னும் பெயரினயுடையதாக, உறுத்தலும் - அமைத்தலே யும், முன்னர் கொள்ப - முதலில் மேற்கொள்வர். . . . . . . .

குறிப்பு:-அங்கத் தொடங்குமுன் கதா சக்தர்ப்பம் விளங்குதற்கு இன்றியமையாத விடயங்களை சேபாத்திரங்கள் வாயிலாக வெளியிட்டுக் கூறும், பகுதிக்குக் கதை நிறைகளமெனப் பெயராம். இதன.வடமொழி நாடக

விலக்கண வாசிரியர்கள் விஷ்கம்பம்,பிரவேசம் என்பர். . . . (கடு)

189. ஒன்று முதலாப் பத்துக் காறு: . . . ." '

மங்க மடைந்திடு மரிய நாடகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/136&oldid=653498" இலிருந்து மீள்விக்கப்பட்டது