பக்கம்:நாடகவியல்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

தென்றிவை பாறு நகைத்திறச் சுவையும் வென்றியும் விநோதக் கூத்தென விசைப்ப" என்ற சூத்திரத்தானுணர்க. - 'குரவை யென்பது கூறுங்காலேக்,

செய்தோர் செய்த காமமும் விறலும், எய்தவுரைக்கு மியல்பிற்றென்ப'; 'குரவை யென்ப தெழுவர் மங்கையர் செங்கிலே மண்டலக் கடகக் கைகோத் தங்கிலேக் கொட்பகின் ருட லாகும் '; குரவைக் கூத்தே கைகோத்தாடல் என்ற பழைய சூத்திரங்களும், காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனுங் கைபி ணேத்தாடுவது என்ற சிலப்பதிகாரம் அடியார்க்கு எல்லார் உரைப்பகுதியும் ஈண்டு நோக்கற்பாலன. (உக) நகைக்கூத்து 203. எவரை யேனு மிசைபட வாயினும்

வசைபட வாயினும் வகுப்பான் வேண்டி விதாடக னாச வவைக்கண் மிகுந்த நகைத்திறம் விளேத்தா டுகனகைக் கூத்து. எவாை எனும் - யாவாாயினு மொருவரை, இசை பட ஆயினும் - புகழ்ச்சிபொருந்தவேனும், வசை பட ஆயினும் . இகழ்ச்சி பொருந்தவேனும், வகுப்பான் வேண்டி - வகுத்துக் கூறுதற்கு விரும்பி, விது.ாடகன் - விதுர ஷகன், அரச அவைக்கண் - இராஜ சபையினிடத்து, மிகுந்த తా: திறம் விளத்து ஆடுதல் - மிக்க கைச்சுவை தோன்ற ஆடுதல், கைக்கூத்து - நகைக் கூத்தெனப் பெயர்பெறும்.

குறிப்பு:-இதனே விதுளடகக்கூத்தென்றுங் கறுப. இசைபட ஆடும் ககைக்கூத்தின வென்றிக்கத் தென்பாருமுளர். -

வென்றி வகையே விநோதமாகும்'; அவற்றுள், மாற்ரு ளுெடுக்கமும் மன்ன லுயர்ச்சியும் மேற்படக் கூறும் வென்றிக் கூத்தே'; 'பல்வகை புருவமும் பழித்துக் காட்ட வல்லவ குதல் வசையெனப் படுமே; என்ற சூத்திரங்களிளுல் இசைபடவாயினும் வசைபடவாயிலும் ஆடு நகைக்கூத்தி னியல்பு விளங்கும். சூளாமணிக்காப்பியம் சுயம்வரச் சருக்கத் திற் கூறப்பட்ட கிவிட்டாாஜன் முன்பு விதாடகன் ஆடிய கூத்து இக் கைக் கூத்தின் பாலதாம். ". . . . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/143&oldid=653505" இலிருந்து மீள்விக்கப்பட்டது