பக்கம்:நாடகவியல்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கூறுமிடத்து, உற்ற பின்னர் - தலைவன் தலைவியர் தம்முள் ஒருவரை பொரு வர் அண்மிய பிறகு, உளம் மகிழ்வு உறுப்பன முற்ற அவர் மனம் மகிழத் தக்கன யாவற்றையும், தக்து ஒழி மொய்ம்பிற்று ஆகும் - கொடுத்து நீங்கும் வன மையை உடையதாகும. - * குறிப்பு:-வருகென, போகென: தொகுத்தல் விகாாம். இயல்-இலக்க

ணம். வருகென வந்து போகெனப் போவது இதன் இலக்கணமாதலின் சது ஒருவர் கூட்டக் கூடியதாயிற்று.

கொண்வரி யென்பது கானுங் காலை

வந்த பின்னர் மனமகிழ் வுறுப்பன

தந்து நீங்குக் தன்மைய தாகும்”

என்பது சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரை மேற்கோள்.

உள்வரி - 209. அரச மரபின ராகு மக்க

ளூற்றெழு மன்பின் வேற்றுருக் கொண்டுங்

கொள்ளாது மாடு மெள்ளாத கூத்தே

யுள்வரி யென்ப வுணர்த்திசி னேரே.

அரசர் மரபினர் ஆகும் மக்கள் - அரச குலத்தினராகிய தலைமக்கள், ஊற்று எழும் அன்பின் - உள்ளிருந்து ஊற்றுப் புறப்படுவதுபோல வெளிப் படும் அன்பினடியாக, வேறு உருகொண்டும் - மாறு வேடம் பூண்டும், - கொள்ளாதும் - மாறுவேடம் புனேயாதும், ஆடும் எள்ளாத கூத்தே-நடிக்கும் - இகழ்ச்சியற்ற கூத்தே, உணர்த்திசினுேர் - நாடக நூலறிஞர், உள்வரி என்ப . உள்வரிக் கூத்தென்று கூறப. -

குறிப்பு:-அரச மரபினராகும் என விசேடித்தமையால் இவ்வுள்

வரிக்கூத்துப் பெரும்பாலும் அன்னுேர்க் குரியதெனக் கூறியத்ாயிற்று. உள் வரி - வடிவு மறைத்தல், வேற்றுருக்கொண்டு நடித்தல், உள்வரியாவது பாண்டவர் விராட நகரத்துப் பிறிதுருவங் கொண்டாற் போல்வது என்று சிலப்பதிகார அடியார்க்கு கல்லாரும், கிருத்திரிமவேடம் என்று அரும்பத வுரைகாசரும கூறுவா. • . W

உறையுட் குடிகை யுள்வரிக் கொண்ட;"

தோட்டலர் குழலி யுள்வரி நீங்கி;"

உள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள் (Daf:Guaడి) உள்வரிக் கோலத் துறுதுணை தேடி' (சிலப். 8. 89).

உள்வரி யென்பது துணர்த்துங் காலை மண்டல மாக்கள் பிறிதோ ருருவங், r • . கொண்டுங் கொள்ளாது மாடுதற் குளித்தே,” என்பது அடியார்க்கு நல்லாருரை மேற்கோள். மண்டல மாக்கள்ே அரசர். - - (ங்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/147&oldid=653509" இலிருந்து மீள்விக்கப்பட்டது