பக்கம்:நாடகவியல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv.

ஆசிரியர் தமது தாலினே பச்சிட்டுமுடித்த பின்னர் தாலின்கட் செய்ய வேண்டுமென்று கருதியிருந்த சில திருத்தங்களையும் பாட பேதங்களையும் இப்புதுப் பதிப்பில் உரிய இடங்களில் செய்து அவற்றிற்கேற்ப உரையும் வரைந்துள்ளேன். இந்நூல் வகுத்த காலத்து ஆசிரியரோடு உடலுறைந்து அண்மிப் பழகும் பாக்கியம் பெற்றதோடன்றி இந்நூலே யவர் வாயிலாகப் பாடங் கேட்டுளேனயினும் பல்லாண்டுகட்குப்பின்னர் உரையெழுதப் புகுந்த மையின் மறப்பெனும் பகைவன் வாரிக்கொண்டனவொழிய நெஞ்செனுக் துணேவன் நிறுத்தியன கொண்டு உரையினேயொருவாறு எழுதிமுடித்தனன். ஆதலின் புரைபலதுன்னியிருத்தலுங் கூடும்; பெரியார் பொறுத்தருள்க. ... *

இந் நாடகவியலுக்கு உரை வரைவான் புகுந்த நன்முயற்சிக்கண் கால இடையிடுபட்டும் ஒன்றிற்கும் பற்ருத சிறியேனேயும் ஊக்கிக் கடைபோகும் மட்டும் தோன்ருத் துணையாய் உதவி புரிந்துகின்ற எல்லாம் வல்ல முழுமுதற் பெருமாளுகிய நடராஜ மூர்த்தியை மனமொழி மெய்களான் வணங்கு கின்றேன். -

கோயமுத்தார் க. பலராம ஐயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/15&oldid=653378" இலிருந்து மீள்விக்கப்பட்டது