பக்கம்:நாடகவியல்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட கவியல் 419

கண்டவர்க் குரைத்த காட்சி வரியு மடுத்தடுத் தவர்முன் மயங்கிய மயக்க மெடுத்தவர் தீர்த்த வேடுத்துக்கோள் வரியும்.' என்ற சிலப்பதிகார வேனிற்காதையடிகள் இவ் வரிக்கூத்து வகைகளி னியல்டை விளக்குதல் காண்க. (சக) முதலிடைகடைக்கூத்துக்கள் 215. முதலிடை கடையெனு மூவகைக் கூத்துங்

காலந் தேயங் கரும மென்ற முத்திறம் புனைந்து மொழிவா னமைந்த மூவரு ளொருவர் முனைந்து மேனின் றேன்ற நீதிக ளின்னிசைப் பாட்டி னெடுத்து வகுக்கு மியல்பின வாகும். முதல் இடை கடை எனும் மூன்று வகை கூத்தும் - முதற்கூத்து இடைக்கூத்து கடைக்கூத்தென்று சொல்லப்படும் மூன்று பகுதியவாய கூத் துக்களும், காலம், தேயம் - இடம், கருமம் - தொழில், என்ற-, முத்தி றம் - மூன்றன் றன்மைகளையும், புனத்து மொழிவான் அமைந்த வரு ணித்துக் கூறும் வன்மை பொருந்திய, மூவருள் ஒருவர் - மூவர் தம்முள் ஒருவர், முனைந்து முன்வந்து, மேல் கின்று - அரங்கத்தினிடம் நின்று, ஏன்ற நீதிகள் - எடுத்துக்கொண்ட நாடகத்திற்கூற அமைந்த திேகளே, - இனிமை இசை பாட்டின் - இனிய இசைப்பாடல்களான், எடுத்து வகுக்கும் இயல்பின ஆகும் - செவ்விதிற் புலனுக விரித்து வகுத்துக்கூறும் இயல்பினே யுடையனவாகும். -

குறிப்பு-நாடகத்தின் முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் இவை நிகழ்த்தப்படுதலின் இப்பெயர் பெற்றன. நாடகக்கதை நிகழுங் ಹTಖಕ தினையாதல் இடத்தினையாதல் அன்றிச் செயலினையாதல் கூத்து முகத்தாற் புனேந்து கூற அமைந்த மூவருள் ஒருவர் நாடகத்தின் முதல் இடைகடை யென்னு மூவயின் ஒளிடத்து, அமயத்துக் கேற்ற திேகளே இனிய இசைப் பாடல்களின் வாயிலாகப் பாடியாடல் இவற்றின் நன்மையென்பது விளங் கும். நாடகக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்து முதற்கண் மங்கல வாழ்த் பாடலும், இடைக்கண் குன்றக் குரவையும் ஆய்ச்சியர் குரவையும், கடைக் கண் வாழ்த்துக் காதையும் முறையே முதலிடை நடைக் கூத்துக்களாய் ஒாற். முன் அமைதல் உற்று நோக்கு தர்க்குப் புலளும், ஷேக்ஸ்பியாாதிய மேற்புல ஆசிரியர்தம் நாடகங்கள் சிலவற்றுள் இவையிற்றினுக்கு இலக்கியங் காண லாம். இம்மூவகைக் கூத்தும் ஒரே நாடகத்தின்கண் அமைதல் வேண்டு மென்னும் நியதியின்றி ஒன்ருே இரண்டோ வருத லுமுண்டு. இலக்கியம் வந்துழிக் காண்க. (ச.உ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/152&oldid=653514" இலிருந்து மீள்விக்கப்பட்டது