பக்கம்:நாடகவியல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ

திருச்சிற்றம்பலம் ந ா ட க வி ய ல்

காடகவியல் என்னுஞ் சொற்ருெடர் நாடகத்திற்கு இலக்கணஞ் சொல்லும் நூல் என்னும் பொருளுடையது. இனி நாடகத்தினது இலக் கணத்தைக்கூறும் நூல் என விரித்தலுமாம். முன்னதாயின் நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப் பெயராய் நூலுக்காயிற்று. பின்னதாயின் ஆரும்வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்து அவ்வாருயிற்று. இன்னும் இந்நூலின் பெயர்க்கானத்தை ஆசிரியர் தமது முகவுரையின் முதற் பக்கத்திலேயே தெளிவுபெற விளக்கி யிருத்தல் காண்க.

ப ா யி ர ம்

வாழ் த் து

தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையு, மீசனென வேயுளத்து ளெண்,' என்று கூறியாங்கு, கடவுள் வாழ்த்துக் கூறுவார் தமது தேசிகர்க ள்ாகிய ஞானகுருவையும் தமிழ் வித்தியா குருவையும் உடன் வண்ங்குவா ராயினர். எடுத்துக்கொண்ட நூல் இடையூறு நீங்கி யினிது முடிதற். பொருட்டு முதற்கண் விநாயகரையும், தமிழ்க் கடவுளென்னும் உரிமை ப்ற்றியும் வினாயகர்க் கிளவலென்பது பற்றியும் பின்னர் முருகனையும், அவர் அருள்வழி நிற்கும் வாக்கின் துணைவியாதல்பற்றிப் பின்னர் நாமகளையும், நாடகலக்கணத்திற்கெல்லாம் ஒரு காட்டாகி கிற்கு முரிமைபற்றி நடராஜ ரையும் ஒரு முறைபற்றி வணங்கினரென்க. அன்றியும் விநாயகரும் முருக ரும் முகத்தாற் சிறப்பும், காமகள் நாவாற் சிறப்பும், நடராஜர் தாளாற் சிறப்பு முடையாய் விளங்குதலின் அம்முறை பற்றியே வணக்கமுறையு.

மே ற்பட்டதென் ö。

பாயிரமாவது sGsi தாம் செய்யப்புகுர்த நூலுக்கு முன்னே தர்ம்' கடவுளைவேண்டி வணங்கினமையும், அவைய்டக்கமும், தாம் செய்யும் நூல்ர்வது, இதுவென்பதும், அது செய்தற் காரணமும் முதலாயின. கூர்வதாம். இத்னைக், தlசிறப்புப் பாயிரம் என்பதுமுண்டு. : தெய்வ வணக்கமுஞ் செயப்படு ப்ொருளு, மெய்த வுரைப்பது தற்சிறப்பாகும்” என்ருநாகலி னென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/16&oldid=653379" இலிருந்து மீள்விக்கப்பட்டது