பக்கம்:நாடகவியல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

விநாயகர் வணக்கம் 1. பூவளர் கொன்றைப் பொன்முடி விநாயகன்

சேவடித் தாமரை சென்னிசேர்த் திடுவாம். பூவளர் கொன்றை - அழகு மேன்மேலும் வளர்கின்ற கொன் றைப்பூ மாலையினைச் சூடிய, பொன்முடி விநாயகன் - பொன்னுலியன்ற கிரீடத்தை யணிந்த் விநாயகக் கடவுளுடைய, செம்மை அடிதாமரை சிவந்த பாததாமரைகளை, சென்னி சேர்த்திடுவாம் - (அணியாகத்) தலையிற் சூடிக் கொள்வாம்.

குறிப்பு: - தெய்வத்தன்மை வாய்ந்த கொன்றையாதலின் ஏனைய மலா. களைப்போல வாடாதென்பதைக் குறிப்பிப்பான், பூவளர் கொன்றை யென்று அடைகொடுத் தோகினர். செந்நிறத்தாலும் மென்மைத் தன்மை யானும் பாதங்கட்குச் செந்தாமரை யுவமையாயிற்று. சேவடியினைத் தாம சையாக்கியதற்கேற்ப அதனச் சிரத்திலணிந்தார்; அந்தணர் சூடுவதும் அரவிந்தமாத லுய்த்துணர்க. (க) ಆಕ್ರಹಕಿಹLa வணக்கம் ~ - 2. கமழுறு வெட்சி கடம்பலர் மிலேந்தமுத்

தமிழ்முதற் குரவன் முண்மலர் பணிவாம். கமழ் உறு வெட்சி, கடம்பு அலர் மிலேந்த (எத்திக்கினும்) LEាយ៉ា வீசுகின்ற வெட்சி மலரினையுஞ் செங்கடப்பம் பூவினேயுஞ் சூடிய, மூன்று தமிழ் முதல் குரவன் - மூவகைத் தமிழிலுக்கும் பரமாசிரியனுகிய முருக பிரானே, தாள் மலர்பணிவாம் - பாதகமலங்களிற் பணிந்து வணங்குவாம்.

குறிப்பு:-கமழுறு என்பதனைக் கடம்பிற்குங் கூட்டுக, வெட்சி, கடம்பு. இரண்டும் முருகபிரானுக்கு மாலையாதல், செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு' 'இருள்படப் பொதுளிய பாாரை மராஅத் துருள் பூக் தண்டார் புரளுமார்பினன்' என்னுந் திருமுருகாற்றுப்படை யடிகளானறிக. முத்தமிழ் : இயல், இசை, நாடகம்; இவையிற்றினிலக்கணங்களை நாடக வியலின் முகவுரையானுணர்க. முருகபிரான், அகத்தியன் முதலாயினர்க்கு முத்தமிழாசிரியரா யிருந்தமையானும், உருத்திரசன்மாாய் வந்து இறையன சகப்பொருட்கு உரை தெளித்தமையானும், ஞானசம்பந்தராய்த் தேனினு. மினிய தேவாாமீந்து முத்த்மிழ்விரகர் என்று பல்லோராலுஞ் சிறப்பித்துக் கொண்டாடப் பெற்றமையானும் அறுமுகக்கடவுள் முத்தமிழ் முதற்குரவ' னெனப்பட்டார். நூல் அறிபுலவ' என்று நக்கீரருரைத்ததும் இத்' பற்றியன்ருே குரவன்: மேலோன். முத்தமிழினுள் ஒன்ருயநாடகத் தமிழிற்கு மாத்திரம் இலக்கணம் வகுப்பான் புகுந்த ஆசிரியர் முத் தமிழ்க் குரவரை வணங்கிய தெற்றிற்கோ வெனின், இயற்றமிழும் இசைத்தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறக்குமென்பதனை யறிவுறுத் தற்கென்க. s - (e.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/17&oldid=653380" இலிருந்து மீள்விக்கப்பட்டது