பக்கம்:நாடகவியல்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

காவ லாளர் மேவிய தானமே நாடக சாலேயா நாடுறு மதுதான் "தேவர் குழாமுஞ்செபித்த பள்ளியும் புள்ளின் சேக்கையும் புற்று நீங்கிப் போர்க்களி யானப் புாைகூடஞ் சாராது மாவின் பந்தியொடு மயங்கல்செய்யாது செருப்புகு மிடமுஞ் சேரியு நீங்கி துண்மை யுணர்ந்த திண்மைத் காகி மதுரச் சுவைமிகடஉ மதுர காறித் தீரா மாட்சி கிலத்தொடு பொருந்தி' நேப்த் தியமு மரங்குங் கானுக ரிருக்கையு மென்ன வியன்மூ வகைய விடனு முடைய திசைக்குங் காலே.

பருமை நகர் நாப்பண் - பெரிய நகரத்தின் நடுவில், பலர் குழுஉ மன்றத்து - பலர் கூடுஞ் சபையிடத்து, எடுத்த நாடகம் நடித்திடற்கு இயைந்த-ஆடுதற்கு எடுத்துக்கொண்ட நாடகத்தினை கடித்தற்குப் பொருத்திய, காவல் ஆளர் மேவிய தானமே - காவலைப் புரிபவர் கூடிய இடமே, நாடகம் சாலைஆம்-நாடகசாலை யென்னப்படும் நாடு உறும் அதுதான் - ஆராய்தற் குப் பொருந்திய அங்காடகசாலை, தேவர் குழாமும் - தெய்வங்கள் கூடுமிட மும், செபித்த பள்ளியும் - முனிவர்கள் இருந்து மந்திரஞ் செபிக்கும் பள்ளி களும், புள்ளின் சேக்கை - பறவைகள் தங்கும் கூடுகள் அமைந்த இடங் களும், புற்றும் - பாம்பு முதலியவைகள் தங்கும் புற்றுக்களும், நீங்கிபேரர் களியான புரை சாராது - போரினச் செய்யும் மதக்களிப்பினையுடைய யானைகள் கட்டுங் கூடங்கள் சேராமல், மாவின் பந்தியொடு மயங்கல் செய் பாது- குதிசைகள் கட்டுஞ் சாலைகள் கலவாமல், செரு புகும் இடமும் சேரி யும் நீங்கி - போர் புரிவோர் போரினப்பயிலும் இடங்களும் அன்னுேர்தஞ் சேரிகளும் நீங்கியிருப்பதாய், அண்மை உணர்ந்த திண்மைத்து ஆகி - நுட்ப மாண மண் செறிந்த திட்பமான கிலப்பான்மை வாய்ந்ததாகி, மதுரம் சுவை மிகூஉம் மதுரம் நாறி - தித்திப்புச் சுவையும் இனிமை மிக்க காற்றமும் உடையதுமாகி, கீரா மாட்சி நிலத்தொடு பொருந்தி - நீங்குதலில்லாத பெருமை வாய்ந்த நிலத்தின்கட் பொருந்தி யிருப்பதாய், நேபத்தியமும்-, அக்கும் - நாடக மேடையும், கானுகர் இருக்கையும் நாடகம் பார்ப்பவர் வீற்றிருக்கும் இடமும், என்ன இயல் மூன்று வகைய இடனும் உடையது - என்று சொல்லப்பட்ட மூவகை இடங்களையும் உடையதாம், இசைக்கும் கால் - சொல்லுமிடத்து. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/185&oldid=653546" இலிருந்து மீள்விக்கப்பட்டது