பக்கம்:நாடகவியல்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குதி) க ச ட க வி ய ல் 455

பாத்திரங் கட்கியை பணிகளு முடைகளும் பாத்திர மினி துறை பண்புறு மிடங்களுங் கரந்துபோக் கிடனுங் கண்ணுளர் குடிஞையுங் களங்கட் குரிய கவினுறு பொருள்களு முடைய தாகி நடைபெறு வதுவாம். நாடகசாலையின் புறன் கேபத்தியம்-நாடகசாலையி னுெருபுறத்துள்ள நேபத்தியம், இன்றி அமையா இசை கருவிகளும் - அவசியம் வேண்டுவன வாகிய வாத்தியங்களும், அவற்றை இசைக்கும் அரிய பாணரும் - அவ்வாத் தியங்களை வாசிக்கும் இசைப்புலமை சிறந்த வித்துவான்களும், கானம் சான்ற காயகர் தாமும் இசை நன்கமைந்த பாடகர்களும், பாத்திரங்கட்கு இயை பணிகளும் உடைகளும் நாடக பாத்திரங்கள் புனேதற்கு இயைக் தனவாய அணிகலன்களும் உடுக்கும் உடைகளும், பாத்திரம் இனிது உறை பண்பு உறும் இடங்களும் - நாடக பாத்திரங்களாக வருபவர் தங்குதற்குரிய பண்பு வாய்ந்த இடங்களும், காந்து போக்கு இடனும் - ஒளிந்து செல்லுதற் குரிய இடங்களும், கண்ணுளர் குடிஞையும் - கூத்தர்கள் கங்கும் அறைக ளும், களங்கட்கு உரிய கவின் உறு பொருள்களும் - நாடகக் காட்சிகளை யமைத்தற்கு வேண்டிய அழகு பொருந்திய பொருள்களும், உடையது ஆகி நடை பெறுவது ஆம் பெற்றிருப்பதாகி அமைந்ததாம்.

குறிப்பு:-கேபத்தியம் நாடக சாலையின் ஒர் புறத்தே அமைக்கப்படும் இயல்பினதாதலின் புறனேபத்தியம் என விசேடித்தனர்; அன்றிப் புறன் எழனுருபெனக் கோடலுமாம். இசைக் கருவிகள் - மத்தளம், குழல் முத லிய வாத்தியங்கள். அரிய பாணர்:

' குழலினும் யாழினுங் குரன்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டு மரும்பெறன் மரபிற் பெரும்பா னிருக்கையும் ” என்ற சிலப்பதிகார அடிகளையும், தொளைக்கருவியானும் காப்புக்கருவியா னுங் குரன் முதலாயுள்ள ஏழிசையினையும் சரிகமபதகி என்னும் ஏழெ ழுத்தினையும் மூவகை வங்கியத்திலும் கால்வகை யாழினும் பிறக்கும் பண் களுக்கு இன்றியமையாத மூவேழு திறத்தையுங் குற்றமின்முக இசைத்துக் காட்டவல்ல பெறுதற்கு அரிய இசை மரபை யறிந்த குழல் பாணர் முத லாய பெரிய இசைக்காரிருக்கு மிடங்களுமென்க" என்ற அடியார்க்கு நல்லாருரையினையும் ஈண்டு நோக்குக. காயகர் - பாடகர். பாத்திரங்கட் கியை பணிகளும் உடைகளும்-நாடகபாத்திரங்களாக வேடம் புண்கற்கு

வேண்டிய அணிகலன்களும் ஆடைகளும். தண்ணுளர்: சாந்திக் கூத்தரென்

பர் அடியார்க்கு கல்லார்; மதங்க, ரென் பாரு முளர். சாந்திக் கூத்தாவது:

வாசிகை வைத்து மணித்தோ டணியணிந்து மூசிய சுண்ண முகத்தெழுதித்-தேசுடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/188&oldid=653549" இலிருந்து மீள்விக்கப்பட்டது