பக்கம்:நாடகவியல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 299

குறிப்பு:-அறம் பொருள் இன்பமென்னு மூவகைப் பொருளினயே பெற்று, உவகை, பெருமிதம், கை, வெகுளி, வியப்பு, அவலம், அச்சம் என்னும் எழுவகைச் சுவையினேயுமே யுடையதாயியலு நாடகம் அரசர் வகுப்பாம். நாமகள் சிலம்பின் தான்காம் பாலாகிய சுகுண சுகேசர் என்னும் நாடகம் இவ்வகைக் குதாரணமாம். (க.க)

30. சமநிலை யொழிசுவை யமைவா மேவி

யறம்பொரு ளவற்றைத் திறம்பெற வுாைப்பது வணிகர் வகுப்பென வழங்க லாகும். சமகில ஒழிசுவை - சமநிலை யொழித்த ஏனைய எண்வகைச் சுவை களும், அமைவாமே.வி - என்ருகப் பொருத்தி, அறம் பொருள் இவற்றை அறமும் பொருளுமாகிய இரண்டு பொருள்களையே, திறம்பெற உரைப்பதுஇனிது வெளிப்பட்டுத் தோன்றுமாறு கூறும் நாடகம், வணிகர் வகுப்பு என வழங்கல் ஆகும் - வணிகர் வகுப்பினைச் சார்ந்த காடகம் என்று கூறுதற் குரியது.

குறிப்பு:-வைசிய ஜாதி நாடகமென்று கூறப்படுவது மிதுவே. இதற்கும் இனி வரும் வேளாண் வகுப்பிற்கும் நாடகங்கள் வந்துழிக் காண்க. - . , (ao)

31. பெருமிதஞ் சமகிலே பேணு தாகி

மேலற முரைப்பது வேளாண் வகுப்பாம். பெருமிதம் சமநிலை பேணுதாகி-பெருமிதக் சுவையினேயும் சமநிலைச் சுவையினையுங் கொள்ளாததாகி, மேல் அறம் உரைப்பது மேலான அறப் பொருளையே யெடுத்துக் கூறுவது, வேளாண் வகுப்பாம் - வேளாளர் வகுப்பு நாடகமாம்.

குறிப்பு:-சூத்திர ஜாதி நாடகம் என்று கூறப்படுவது மிதவே. (உக) .

(உ) சந்தி 32. இடைப்பொரு ஞடனே யெடுத்த கதையின் றலைப்பொருள் சார்ந்து தழைத்து முதிர்வது காட்டியக் கட்டுரைச் சக்தியா மதுதான் முகமே பிரதி முகமே கருப்பம் விளைவு துய்த்தலோ டைவகை யாகும். எடுத்த கதையின் - நாடகத்திற்காக ஆசிரியன் எடுத்த கதையினு டைய, இடை பொருள் உடனே இடையில் கிகழ்ந்த பொருள்களுடன், தலே பொருள் சார்ந்து - ஆரம்பத்திற் சம்பவித்த விடயங்கள் பொருந்தி, தழைத்து முதிர்வது - வளர்ந்து முதிர்ச்சி பெறுவது, காட்டியம் கட்டுரை சக்தி ஆம் சாட்டியக் கட்டுரையாகிய சக்தியென்று சொல்லப்படும். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/32&oldid=653395" இலிருந்து மீள்விக்கப்பட்டது