பக்கம்:நாடகவியல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

போதும் - இனத்ததொழிலின் பிரயோசனமே சித்தித்தவிடத்தும், நிகழும் சுவையின நீள்வியப்பு என்ப - உண்டாகுஞ் சுவையின ண்ேடவியப்புச் சுவையென்று கூறுவார்கள்.

குறிப்பு:-புதுமை பெருமை சிறுமை ஆக்கம் இவையிற்றினடியாகவியப் புண்டாவது யாவர்க்குங் தெரிந்ததாதலின் உதாரணங்கூறிற்றிலம். கலாவதி நாடகம் இரண்டாமங்கம் மூன்ருங்களத்தட் கலாவதியின் கையினின்று கீழேவிழுந்திருந்த சித்திரத்தைப்பார்க்க சிதாங்கன், அது தன்னுடைய உருவம் பொறித்த படமென்பதைக் கண்டபோழ்து,

'இப்படிக்கிரும்பி யிப்படம் யாதென்

அற்று தோன் சற்றே பார்த்தி' என்று சத்தியப்பிரியனே நோக்கிக் கூறியது எதிர்பாராச் செயலெய்தியதனு துண்டர்ன வியாப்பாம். கலாவதி நாடகம் நான்காமங்கம் முதற்களத்தில், சிதாகத்தனப் பெறவேண்டுமென்ற விருப்பமாத்திரையிற் கொண்ட கலாவதி தற்செயலாய் கந்தவனம்வா, ஆண்டுத் துயிலும் சிதாகந்தனே கோக்கி, யோன் படத்திற் பார்த்தவண்ணமே காணப்படுகின்றனனே இஃதென்னே யாச்சரி யம்' என்று வியந்தது முயற்சியின்றி முன்னிய தன்ருெழின் முற்றியதனு துண்டான வியப்பாம். கலாவதி நாடகத்தில், சயதுங்கன் சிதாகக்தனேச் சாதாரணமான வீரன் என்றே மதித்துத் தன் புதல்வி கலாவதியைக் கொடுக்க ஒருப்பட்டபோழ்து, அவன் பாண்டி காட்டிறைவன் புதல்வன் என்றும் புலப்பட்டபோழ்து அவனடைந்த வியப்பு, விரும்பு மதற்குமேன் மிகவு மெய்துழி விளைந்தது. சூர்ப்பனகை யென்னும் பிரகசனத்தில், சூர்ப்பனகை தனக்குச் சிறந்த நாயகன் கிடைப்பனேவென்று ஜோதிடங்கேட்ப வொரு முனிவன்பாற் செல்லுழி, ஆண்டுப் பன்ன சாலையில் இராமபிரானேயே கண்டபோழ்து அவள் அடைந்த வியப்பு, கருவிக ளுறுவான் முயலுழிப் பயனே முடிந்ததனு அண்டாயது. (ங்க) இழிப்பு 50. மூப்பே பிணியே வருத்த மடியா -

வெறுப்பினை விளக்கும் வீண்செயன் மொழிகளே வழங்கிக் காட்டுஞ் சுவையிழிப் பாகும். மூப்பே - மூப்பும், பிணியே பிணியும், வருத்தம் - வருத்தமும், அடியா - காரணமாக, வெறுப்பினே விளக்கும் வீண் செயல் மொழிகளை - வெறுப்பினையுண்டாக்கும் பயனற்ற செயல்களையும் மொழிகளையும், வழங்கி காட்டும் சுவை இழிப்பு ஆகும் - எடுத்துரைக்குஞ் Ց ՃԾ}3}} இழிப்பாகும்.

குறிப்பு:-இழிப்பு எனினும் இளிவால் எனினும் ஒக்கும். முயற்சியும் மென்மையும் வருத்தத்தினு ளடங்குமாதலின், மென்மை யென்பதனையுங் தொல்காப்பியனர் தனியே கொண்டதற் கிணங்க சம்மாசிரியர் கூருது விடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/51&oldid=653414" இலிருந்து மீள்விக்கப்பட்டது