பக்கம்:நாடகவியல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 327

நகைசமம் வியப்பு மென்சுவைப் பால பெருமித மச்சம் வன்சுவைப் பால. உவகையும் அவலமும் இங்கிய மென்மை சுவை - உவகை அவலம் என்னுமிரண்டு சுவையும் மிகுதியும் மென்மையான சுவையாம்; வெகுளியும் இழிப்பும் விளைந்தவன்மை சுவை-வெகுளியும் இழிப்பும் மிகுதியும் வன்மை யான சுவையாம்; நகை சமம் வியப்பு - நகை சமநிலை வியப்பு என்னும் மூன் மும், மென்மை சுவை பால - மென்மையான சுவையுட் சேர்க்கப்படுவன வாம்; பெருமிதம் அச்சம் - பெருமிதமும் அச்சமும், வன்மை சுவை பாலவலியசுவையுளடங்குவனவாம்.

குறிப்பு:-உவகை அவலமிரண்டும் மிகுதியும் மென்சுவையென்றும், நகை சமநிலை வியப்புச் சிறிது மென்சுவையென்றும், வெகுளியும் இழிப்பும் மிகுதியும் வன்மையான சுவையென்றும், பெருமிதமும் அச்சமுஞ் சிறிது வன்சுவையென்றுங் கூறினர். இங்கிய விளைந்த வென்னுஞ் சொற்கள் மிகுதிப் பொருட்கண் வந்தன. (சக)

60. மென்சுவைப் பாலவும் வன்சுவைப் பாலவு

நடுகிலேச் சுவையென நயந்தனர் கொளலே.

மென்மை சுவை பாலவும் வன்மை சுவை பாலவும் - மென்சுவைப் பாற் படுவனவென்றும் வன்சுவைப் பாற்படுவனவென்றும் மேற்கூறப்பட்ட சுவைகளை, நடுநிலை சுவை என ஈடுகிலேச்சுவையென்று, நயந்தனர் கொளல். (அன்னனங் கூற) விரும்பியோர் கொள்வாராக. -

குறிப்பு:-ஏகாரம்-ஈற்றசை. ஒரு சுவை இருவகையின் கண்னும் பயின்று வருமாயின் அதனே நடுநிலைச் சுவையெனக்கூற விரும்புவோர் கொள்ளினிழுக்கன்று என்று கூறியமையானே, எச்சுவை எவ்வமையத்தில் எவ்வகையின்கட் பயிலுமோ அவ்வமையத்தில் அச்சுவையினே அவ்வகை யின் கண்ணதாக் கோடலே ஏற்புடைத்தாமென்பது ஆசிரியர் தங்கருத் தென்றறிக. (டு)

(டு) போருத்தம் - 61. பொருத்த மென்ப தொற்றுமை யுடைமையஃ

திடனுங் காலமுஞ் செயலு மெனமூ விதப்படு மென்பர் மேற்றிசை வாணர். - பொருத்தம் என்பது - பொருத்தம் என்று சொல்லப்படுவது யாதெனின், ஒற்றுமை உடைமை ஒற்றுமை பொருங்கியிருக்குங் தன்மை யாம்; அஃது - அப்பொருத்தம், இடனும் இடப்பொருத்தமும், காலமும்காலப்பொருத்தமும், செயலும் செயற்பொருத்தமும், என - என்று, மூன்று விதப்படும் என்பர் - மூன்றுவகைப்படும் என்று கூறுவார்கள்,

மேற்கு திசை வாணர் - மேற்குத் திசையினாாகிய(யவனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/60&oldid=653422" இலிருந்து மீள்விக்கப்பட்டது