பக்கம்:நாடகவியல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) நாடகவியல் 339

செயற்பொருத்தம் 64. காரண காரிய முறைப்பட் டியங்கி

யருவிக ளாங்காங் கடைந்து கலக்கப் பெற்ற யாறுபோ லுற்று விரியூ வெல்லாப் பகுதியு மெடுத்துரை தொழிலினுக் குட்பட் டொழுகலு முலக வியல்பொடு - மாறு படாமலு கம்புத லரிய விடய முருமலும் விளைந்து நிற்பது செயலின் பொருத்தமாச் செப்பினர் தெளிந்தோர். காரணம் காரியம் முறை பட்டு இயங்கி - காரண காரியங்களின் கிரமப்படி நடந்து, ஆங்கு ஆங்கு - இடை யிடையில், அருவிகள் கலக்க பெற்ற யாறு போல் - சிற்ருறுகள் கலக்கப் பெற்ற யாற்றினேப் போல, உற்று விரியூ - விரிந்து பொருந்தி, எல்லாம் பகுதியும் - காட கக் கதையின் எல்லாப் பாகங்களும், எடுத்து உரை தொழிலினுக்கு - முத் கியமாக எடுத்துக் கூறப்பட்ட தொழிலிற்கு உட்பட்டு ஒழுகலும் - அடங் கிச் செல்லுதலும், உலகம் இயல்பொடு மாறுபடாமலும் - உலகத்திற் சம் பவிக்கக் கூடிய விடயங்களுக்கு விரோதப்படாமலும், நம்புதல் அரிய விடயம் உருமலும் - கம்பத் தகாத விடயங்கள் சம்பவித்தனவாக்காமலும், விளைந்து நிற்பது - எடுத்திவிடயம் முதிர்ந்து நிற்பது, செயலின் பொருத்தமா செயற் பொருத்தமென்று, தெளிந்தோர் செப்பினர் - அறிவிற்றெளித்த பெரியோர் கூறினர். -

குறிப்பு:-க ரணம்: Cause காரியம்: Effect. சிற்ருறுகள் பல பேரியாற்றுடன் கலந்து ஒரு முகமாக அடங்கிச் சேறல்போல, நாடகக் கதையின் பல் பிரிவுகளும், பிரதானமான கதைத்தொடர்ச்சியுடன் மரீஇ நடத்தல் வேண்டும். உவமையணி. உருமலும் என்ற தன்வினைக்கு, உறுத்தாமலும் எனப் பிறவினேப் பொருளுரைத்தாம், குடிபொன்றி" யென்புழிப்போல. - - - - (டுச)

- (சு) கடை 65. கதையினைப் பெய்து கழறிடு மாறே நடையா மதுதான் வாசகஞ் செய்யு ளிசைப்பாட் டோடு மியலு மென்ப. r கதையினை - சாடக்க்கதையின, பெய்து பொருத்தி, கழறிடும் ஆறே கூறும் விதமே, டைட் ஆம் - கடிை யென்று பெயர்பெறும்; அது. தான் - அந்நடைதான், வாசகம் செய்யுள் இசைப்பாட்ட்ோடும் இயலும் என்ப - வசனம் செய்யுள் இசைப்பாட்டென்னும் முத்திறத்தோடும் நடை பெறும் என்று கூறுவார்கள். -

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/62&oldid=653424" இலிருந்து மீள்விக்கப்பட்டது