பக்கம்:நாடகவியல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 333

கீழ் மக்கள் இயல்பில் கிளக்கும் சொல் செறி பாரும் உண்டு - இழிசி னர் இயல்பாக வழங்குஞ் சொற்களிலைாய பாடல்களும் நாடகத்தின்கண் உளவாம், அவற்றை பாரும் கொள்ப - அப்பாடல்களைப் பிழையெனக் கொள்ளாத யாவரும் அங்கீகாரஞ் செய்வார்கள்.

குறிப்பு:- திங்கனமாதல் இழிசினர்வழக்குரை வரையறை யென்னு நூலிற் பரக்கக்காண்க. கலாவதி நாட்கம் நான்காமங்கம் முதற்களத்தில், சோமதத்த னென்னுஞ் சேவகன்.

'ராசா மகளே யிவனுங் கட்ட, ஆசை வைச்சான்! ஐயோ! பாவம்! மோசஞ் செய்ய முன்னே சொன்னன், தோசமிண்டோ சும்மா விட்டேன்” நோண்டிப் போட்ட நூங்குக் கண்ணி காண்டு கத்துங் களுதைப் பாட்டு வேண்டமட்டும் பாடிக் கிட்டு காண்டிக் குலுக்கி நடந்துக் கிட்டே' 'ஏச்சுக் கிட்டுத் திரியு முண்டை பேச்சுக் கேட்டுக் கெட்டுப் போனுன் ச்ேசிச் ச்ேசி யிந்தப் பாவி பேச்சை யின்னிக் கேட்க மாட்டேன்." என்று பாடிய பாடல்கள் நாடகத்தின்கண் அமைவுடையனவாதல் காண்க, உம்மை இறந்தது தழிஇய எச்சவும்மையாம். (சுo) இசைப்பாட்டு 71. பண்ணுங் திறமும் பயின்றனவாகிக்

குழலொடும் யாழொடும் விழுமிதிற் றுவன்றித் தாள வொத்தொடுங் தண்ணுமை முழவொடுங் கூடிகின் றிசைக்குங் கொள்கைத் தாகிப் பொருள்பொதி சொற்கள் பொலிய விசைப்ப தின்னிசைப் பாட்டென வியம்பப் படுமிதைக் கீத வுருவெனக் கிளத்தலு முண்டே பண்ணும் - இராகமும், திறமும் - இராகவகைகளும், பயின்றன ஆகி - தன்மாட்டுப் பொருத்தினவாய், குழலொடும் இசைக்குழலாகிய வங் கியத்தோடும், யாழொடும் பாழ்களிகுேடும், விழுமிதில் துவன்றி மேம்பாடு றப் பொருந்தி, தாளம் ஒத்தொடும் - தாளவிகற்பங்களிளுேடும், தண்ணுமை முழவொடும் - மத்தளம் முழவாதிய கொட்டுங் கருவிகளொடும், கூடி கின்று - சேர்ந்துகின்று, இசைக்கும் கொள்கைத்து ஆகி.பொருத்திப் பாடப் பெறுந் தன்மையதாய், பொருள் பொதி சொற்கள் பொலிய- நற்பொருள் ஆழ்ந்து செறிந்த சொற்கள் விளங்க, இசைப்பது பாடப்படுவது, இனிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/66&oldid=653428" இலிருந்து மீள்விக்கப்பட்டது