பக்கம்:நாடகவியல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

யினைப்போல், இடிக்குநர் இடத்து ாத்திரம் இயல்பை - நடிப்போர்பால் நாடகபாத்திரங்களின் தன்மையினே, ஏற்றி மொழிதலின் - ஆசோபித்துக் கூறுங் தன்மையதாதலின், இ. பெயர்த்த ஆகும் சாதி) உருவகமென்னும் இப்பெயர் பெற்றது. குறிப்பு:உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் தொன்றென மாட்டினஃ துருவகமாகும்' என்பது தண்டியலங்கார சூத்திாம். ஈண்டுமேற்கோளாக எடுத்தாளப்பட்டது. ஈடிக்குநர் கு சாரியை, ங் பெயரிடைகிலே. அரங்கினிடை நடிக்குரைப் பாத் திரங்களாகக்கருது மியல்பினுல் நடிக்குகர்வேறு பாத்திரங்கள்வேறு என் றெண்ணுது அப்ேதமாகக் கருதுவதனுல் இப்பெயர்த்தாயிற்றென்றனர். (க)

121. அன்றியும்,

நாடக நடிப்பி னுாடகத் தெய்து மாடு ரெல்லா மன்பிற் பிறருருக் கோடவி னுருவகப் பெயர்கொடுத் தனரே. அன்றியும் - மேற்கூறிய காரணமல்லாமலும், நாடகம் - நாடகத் தினே, ஈடிப்பின் ஊடு அகத்து - நடித்துக் காட்டுமிடத்து இடையே, எய்தும். (அாங்கின்கட்) போதரும், ஆடுநர் எல்லாம்-ஈடித்துக் காட்டுபவர் யாவரும், அன்பின் - அன்புடன், பிறர் உரு கோடலின் மற்றையோர் உருவங்களைத் தாம் மேற்கொள்வதனுல், உருவகம் பெயர் கொடுத்தனர் - உருவகமென் லும் பெயரினே ஆன்ருேர் கொடுத்தனர். -

குறிப்பு:-ஏகாரம்:ஈற்றசை. உருவினைக்கோடலின் உருவகம் என்ருர். 'அன்றியும் என்றதனுல் மேலைச்சூத்திரத்துட் கூறப்பட்ட காரணமேயன்றி யீண்டுக்குறித்ததும் ஆன்ருேர் வழக்கென்பது பெறப்பட்டது. (+) சாதிவகை 122. அவைதாம்,

நாடகம் பிாக ரணமே பாணம் வியாயோ கம்மே சமவ கார மிடிம மீகா மிருக மங்கம் வீதி பிரக சனமெனப் பத்தாம். அவை தாம் - மேற்கூறிய நாடகச்சாதி வகைகள், நாடகம்- பிரகா ணம்- பாணம்-, வியாயோகம்-, சமவகாரம்-, இடிமம்-, ஈகாமிருகம்-, அங் கம்- வீதி-, பிரகசனம்- என பத்தாம் - என்று பத்து வகைப்படும்.

குறிப்பு:-சண்டுக் குறித்த சாதி வகைகளினியல்புகளைப்பின்னர்வருஞ் சூத்திரங்களான் ஆசிரியர் நிரலே விளக்குதலேயுணர்க. (டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/99&oldid=653461" இலிருந்து மீள்விக்கப்பட்டது