பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

89


ஒருவாறு கூற வேண்டும். அதற்குமுன் வெளிவந்த சில நாடகங்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. நான் எழுதிய இந்த லீலாவதி -சுலோசனாவோ முற்றிலும் வசன ரூபமாக எழுதப்பட்டது. இதைக் கற்றறிந்த தமிழ் உலகம் எங்ஙனம் ஏற்கும் என்னும் பீதியேயாம்.

அப் பயத்தைப் போக்கி அன்று முதல் இது வரையிலும் ஏறக்குறைய அறுபது நாடகங்களைத் தமிழில் வசனரூபமாக எழுதும்-படி அடியேனைச் செய்து வைத்த எல்லாம் வல்ல கருணையங் கடவுளின் பாதாரவிந்தங்களைப் பணிந்து, இந்த “லீலாவதி- சுலோசனா” என்னும் நாடகத்தை நான் எழுதிய கதையை இதை வாசிக்கும் என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

இந்த “லீலாவாதி-சுலோசனா” என்னும் நாடகத்தின் கதை எப்படி என் மனத்தில் முதல் முதல் உதித்தது என்று அநேகம் நண்பர்கள் என்னைக் கேட்டிருக்கின்றனர். ஆகவே அதைச் சற்று விவரமாய் எழுதுகிறேன். எங்கள் சபையின் முதல் இரண்டு நாடகங்கள் ஆடி முடிந்தவுடன், அதன்பொருட்டு சந்தோஷக் கொண்டாட்டமாக ‘ஒரு பிக்னிக்’ (Picnic-வன போஜனம் என்று இதை ஒருவாறு கூறலாம்). வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். அதற்காகத் தக்கதோர் இடம்வேண்டுமென்று, வழக்கப்படி நான் என் தகப்பனாரைக் கேட்க, அவர், அருணாசலீஸ்வரர் பேட்டை யில் காகிமானு சேஷாசல செட்டியாருடைய பங்களாவை, எங்களுக்கு சனி ஞாயிறு இரண்டு தினங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். அச்சமயம் எங்கள் சபையில் சுமார் 50 அங்கத்தினர் இருந்தனர்.

சற்றேறக்குறைய இந்த 50 பெயரும் ஒரு சனிக்கிழமை சாயங்காலம் அவ்விடம் ஒருங்குசேர்ந்து மறுதினம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வரையில் வேடிக்கையாய்க் காலங்கழித்தோம். சனிக்கிழமை சாயங்காலம் நாங்கள் எல்லாம் அந்தப் பங்களாவின் பின்பக்கத்திலுள்ள நடைவாயிலின் சுற்றிலு முள்ள பூந்தோட்டத்தைச் சுற்றி உலாவி வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டு காலங் கழித்த பொழுது, அவ்விடமிருந்த ரோஜாச் செடியில் மலர்ந்திருந்த, என் கண்ணைக் கவர்ந்த ஒரு ரோஜாப் புஷ்பத்தைப் பறித்து, என் பக்கத்திலிருந்த