பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

நாடக மேடை நினைவுகள்


தக்கபடி யோசித்து பெயர்கள் கொடுப்பேன்; கூடியவரைக்கும் ஒவ்வொரு நாடகப் பாத்திரத்திற்கும் குணத்திற்குத் தக்கபடி பெயர்களைக் கொடுத்துக் கொண்டு போவேன். இது முடிந்த பின்தான் உட்கார்ந்து நாடகத்தை எழுத ஆரம்பிப்பேன்.

மேற் சொன்னபடி “லீலாவதி-சுலோசனா"வுக்கும், நாடகத்தின் பிரிவுகளைக் காட்சி காட்சியாக முதலில் எழுதி வைத்துக் கொண்டேன். முதல் முதல் இந்நாடகத்திற்குப் “பொறாமை” என்கிற பெயரையே கொடுக்கத் தீர்மானித்தேன். பிறகு காட்சிகளின் பிரிவுகளைக் குறித்துக் கொண்டபின் அதை மாற்றி “லீலாவதி- சுலோசனா” என்கிற பெயரைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தேன்.

எனது இன்னொரு வழக்கமும், நாடகங்களைப் புதிதாய் எழுத விரும்பும் எனது நண்பர்கள் அறிவது நலமெனத் தோன்றுகிறது. நாடகத்தின் காட்சிகளை இவ்வாறு பிரித்துக் குறித்துக்கொண்டபின், அறிவிற் சிறந்தோர்களாகிய எனது நண்பர்களுட் சிலரை வரவழைத்து, அவர்களுக்கு நான் எடுத்துக் கொண்ட நாடகத்தின் காட்சிகளின் குறிப்பைப் படித்துக் காட்டுவேன். அதில் ஏதாவது குற்றங் குறையிருக்கிறதா என்று அவர்களைக் கேட்பேன். சங்கோசமில்லாமல் தாராளமாக அதைப்பற்றி என்னுடன் பேசும்படி வேண்டுவேன். அவர்கள் கூறும்படியான குணாகுணங்களை யெல்லாம் கவனித்து, என் சிற்றறிவிற்குப் பொருத்தமானது என்று தோற்றும்படியான விஷயங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, அதன்படி கதையின் விவரங்களை மாற்றிக் கொள்வேன். இப்படிச் செய்வதனால் நான் பெரும்பலன் பெற்றிருக்கிறேன். எனது இளைய நண்பர்களும் இவ்வாறே செய்வார்களாயின் பெரும்பலன் அடையக் கூடும் என்று எனக்குத் தோற்றுகிறது.

இதற்கொரு உதாரணமாக இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகத்தின் ஒரு பாகத்தையே எடுத்துரைக்கக்கூடும். இந்த நாடகத்தின் கதையை அக்காலத்தில் எனக்கு அத்யந்த நண்பர்களாயிருந்தவர்களுள் ஒருவராகிய வாமன்பாய் (Vaman Pai) என்னும் மங்களூர் சிநேகிதர் ஒருவரிடமும் கூறிய பொழுது, நாடகத்தில் இரண்டாம் அங்கத்தில் “கைவளை” சீன் என்று வழங்கும் ஒரு காட்சியில் முக்கியமான ஓர்