பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

93


அம்சத்தை அவர்தான் இப்படி எழுதுவாயாயின் நன்றாயிருக்கு மென்று எடுத்துக் கூறினார். அவர் கூறியது மிகவும் சரியென ஒப்புக்கொண்டு, அப்படியே மாற்றி எழுதினேன். இவரிடமிருந்து இன்னும் சில நாடகங்களிலும் சில முக்கியமான குறிப்புகளைப் பிறகு பெற்றேன். இவர் தெய்வகடாட் சத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறார். இவர் செய்த உதவிக்காக இவருக்கு நான் இந்த “நாடக மேடை நினைவுகளின்” மூலமாக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த “லீலாவதி-சுலோசனா” என்னும் நாடகத்தைச் சென்னையில் எழுத ஆரம்பித்த போதிலும், அதன் பெரும் பாகம், திருவனந்தபுரத்தில் எழுதும்படி நேர்ந்தது. எங்களுடைய சிறுபிராயம் முதல் பள்ளிக்கூடத்தில் வெயிற்காலத்திற்காக விடுமுறை விடும் பொழுதுதெல்லாம், வருஷா வருஷம் எங்கள் தகப்பனார் எங்களை ஒவ்வோர் ஊருக்கு அனுப்புவது வழக்கம். இதனால் நான் பெரும் பலன் அடைந்தேன் என்றே சொல்லவேண்டும். இம் மாதிரியாக என் இருபதாவது வயதுக்குள் அநேகம் ஊர்களைப் பார்த்ததனால், என் சிற்றறிவு கொஞ்சம் விசாலமடைந்ததென்றே நான் சொல்லவேண்டும். இவ்வழக்கப்படி இவ்வருஷம் எங்கள் தகப்பனார், என்னையும் என் மூத்த சகோதரர்களுள் ஒருவரையும் திருவனந்தபுரம் அனுப்பினார். இங்ஙனம் நான் திருவனந்தபுரம் போயிருந்த பொழுது, மத்தியான காலங்களில் வேறொன்றும் கவலையில்லாமல் சாவகாசம் அதிகமாயிருந்த படியால், இந்த நாடகத்தை எழுத எனக்கு மிகவும் சௌகர்யமாயிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து திரும்பி வந்தவுடன் நாடகத்தைப் பூர்த்திசெய்து, என் நண்பர்களுக்கெல்லாம், என் வழக்கப்படி அதைப் படித்துக்காட்டினேன். அவர்களெல்லோரும் மிகவும் நன்றாயிருக்கிறதெனக் கூறிக் குதூஹலத் துடன் சீக்கிரத்தில் அதை ஆடவேண்டுமென்று சொன்னார்கள். இன்னின்னாருக்கு இன்னின்ன நாடகப் பாத்திரம் என்று நான் உத்தேசித்து எழுதியபடியே, ஒரு கஷ்டமுமில்லாமல், அவரவர்களுக்கு நாடகப் பாத்திரங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒத்திகைகள் வெகு மும்முரமாய் மூன்று மாதம் நடத்தினோம். அன்றியும் ஒரு நாள் இரவு பூர்ண ஒத்திகையாக வைத்துக்கொண்டு, வேஷத்துடனும் சங்கீதத்