பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

95


இவர் பாட்டுகளைக் கட்டியதுமன்றி, அருகிலிருந்து எல்லோருக்கும் அப்பாட்டுகளைப்பாடும் விதத்தையும் கற்பித்தார். இந்நாடகத்தின் பாட்டுகளில், ஒன்றைப்பற்றிய சிறு நகைப்புக்கிடமான விஷயம் ஒன்றை என் நண்பர்களுக்குத்தெரிவிக்க விரும்புகிறேன். இந்நாடகத்தில் பிரதாபசீலன் பாட வேண்டிய பாட்டொன்றில் அநுபல்லவியில் “அல்லும் பகலும் சொல்லி முடியாத” என்கிற ஒரு அடி எழுதப்பட்டது. அதைப் பாடுபொழுது, பாடுபவன், சங்கீதத்தின் பூர்ணத்தின் பொருட்டு “அல்லும் பகலும் சொல்லி முடியாதரீ” என்று இழுத்தான்; சிறுவயதுக் குரும்பில் நான் “என்னடா அப்பா, அது? அல்லும் பகலும் சொல்லி முடியாதரீ! எவ்வளவு பெரிய ரீயாக இருக்கவேண்டும்!” என்று ஏளனம் செய்தேன். பாட்டை எழுதிவர் உட்பட எல்லோரும் நகைத்தும், அதைவிட்டு வேறுவிதமாகப் பாட வழியில்லாமற் போயிற்று! எங்கள் சபையில் நாங்கள் பாடும் சில பாடல்களில் இம்மாதிரியான குற்றங்கள் இன்னும் இருக்கின்றன. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் இக் குறை வராமல் எப்படிப் பாடுவது என்பது இன்றளவும் ஒரு கஷ்டமாகத்தானிருக்கிறது. இக்குறையை அகற்றும் மார்க்கம் இதைக் கண்ணுறும் சங்கீத வித்வான்கள் யாராவது அறிவிப்பார்களாயின், நானும் எங்கள் சபையாரும் மிகவும் கிருதக்ஞர்களாயிருப்போம்.

இந்த நாடகத்திற்காக நாங்கள் ஒத்திகைகள் நடத்திக் கொண்டிருந்த தறுவாயில், எங்களுக்கு நேரிட்ட ஒரு முக்கியமான கஷ்டத்தைத் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். பல்லாரி சரச வினோத சபையார் சென்னையில் நாடகங்கள் ஆடியதைப் பார்த்து, எப்படி நாங்கள் சுகுண விலாச சபையை ஏற்படுத்தினோமோ, அந்தப் பிரகாரம் இன்னும் சிலர் வேறு சபைகளை ஸ்தாபிக்கத் தொடங்கினர். இம்மாதிரியாக உற்பவித்த நாடக சபைகளில் “ஓரியண்டல் டிராமாடிக் ஸொஸைடி” என்பது ஒன்று. அப்பெயர் கொண்ட சொஸைடி பல வருடங்களுக்கு முன் ஒன்றிருந்து, யாது காரணத்தாலோ அது க்ஷணத்தை அடைந்து அற்றுப் போய் விட்டது. அதன்பேரில் நாங்கள் சுகுண விலாச சபையை ஸ்தாபித்த வருஷம் வேறு சிலர் இந்த ‘ஓரியண்டல் டிராமாடிக் சொஸைடி'யை மறுபடியும் உத்தாரணம் பண்ணவேண்டு